Published:Updated:

‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்

‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்
‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்ததே எனக்குச் சாதனை தான். எனக்குத் தலைவர் பதவி கொடுத்த ராகுல் காந்திக்கு, என்னைத் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கவும் உரிமை உள்ளது எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் தெரிவித்தார்.

‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்

 புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,    "ராணுவ வீரர்களின் உயிர்களுக்கு விலை மதிப்பில்லை இருந்தாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு மற்ற மாநிலத்தில் அளித்துள்ள இழப்பீடு தொகையைப் போல தமிழக அரசும் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் கோழைத்தனமாக, இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

துரைமுருகன் கூட்டணி குறித்து கூறிய கருத்து என்பது நகைச்சுவையான கருத்து அதில் உண்மை இருந்தாலும் அதைத் திரித்து எடுத்துக் கொள்ளக்கூடாது, தொடர்ச்சியாக இரண்டரை ஆண்டுகளாகத் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்ததே சாதனைதான். தமிழக தலைவராக பதவி கொடுத்த ராகுல் காந்திக்கு தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கவும் உரிமை உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு விருப்பம் தான். ராகுல் காந்தி என்னைத் தேர்தலில் போட்டியிடச் சொன்னால் நான் நிச்சயம் போட்டியிடுவேன்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் தமிழகத்தில் திமுக ஆட்சி வரும் சூழ்நிலை ஏற்படும். ஆட்சி மாற்றமும் வரலாம். மத்தியில் ராகுல் காந்தியையும், மாநிலத்தில் ஸ்டாலினையும் ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் தான் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற முடியும். நிபந்தனைகளுடன் வரும் அரசியல் கட்சிகளுக்கு கூட்டணியில் இடம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வரிடம், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது அதிகாரத்தைத் தவறுதலாக பயன்படுத்தி வருகிறார். ஜனநாயகத்திற்கு விரோதமாகச் செயல்படும் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.