Published:Updated:

`அ.தி.மு.க - பா.ஜ.க அல்ல; தி.மு.க தான் அகற்றப்படும்' - கிருஷ்ணசாமி காட்டம்!

`அ.தி.மு.க - பா.ஜ.க அல்ல; தி.மு.க தான் அகற்றப்படும்' - கிருஷ்ணசாமி காட்டம்!
`அ.தி.மு.க - பா.ஜ.க அல்ல; தி.மு.க தான் அகற்றப்படும்' - கிருஷ்ணசாமி காட்டம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி தலைமையில் அந்தக் கிராமத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமாரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் 1,500 ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆனால், ஒரு ரேஷன் கடை மட்டுமே உள்ளது. இன்னொரு கடை அமைக்க வேண்டும். குடிநீர், கழிவுநீர் கால்வாய், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ``கடந்த சில நாள்களுக்கு முன் தூத்துக்குடி சென்றபோது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் அங்கே தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் எனப் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஆலையை மூடுவதற்கு முன் அது சம்பந்தமாக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஆலையால் சுற்றுப்பகுதி மக்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும் என்றால் மூடுவதில் ஆட்சேபம் இல்லை. குறைந்தளவு பாதிப்பு இருந்தால் ஆலையை மூடுவதற்குப் பதில் மறுபரிசீலனை செய்யலாம். காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அங்கே பொது வாக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தல் அறிவித்த பின் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம்" என்றார்.

அ.தி.மு.க - பா.ஜ.க.வை மக்கள் அகற்ற வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், தி.மு.க அகற்றப்படும் எனத் தெரிவித்தார்.