Published:Updated:

ஏன் ஒரே நேரத்தில் 2,500 வீரர்களை அனுப்ப வேண்டும்? - புல்வாமா தாக்குதலில் சந்தேகங்களை அடுக்கும் மம்தா

ஏன் ஒரே நேரத்தில் 2,500 வீரர்களை அனுப்ப வேண்டும்? - புல்வாமா தாக்குதலில் சந்தேகங்களை அடுக்கும் மம்தா
ஏன் ஒரே நேரத்தில் 2,500 வீரர்களை அனுப்ப வேண்டும்? - புல்வாமா தாக்குதலில் சந்தேகங்களை அடுக்கும் மம்தா

கடந்த 14-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தற்கொலைப் படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்தத் தாக்குதல் இந்தியா உட்பட உலகநாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஏன் ஒரே நேரத்தில் 2,500 வீரர்களை அனுப்ப வேண்டும்? - புல்வாமா தாக்குதலில் சந்தேகங்களை அடுக்கும் மம்தா

’தாக்குதல் நடப்பதற்கு முன்னதாக ஜம்மு-ஸ்ரீநகர் இடையே உள்ள நெடுஞ்சாலை முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு பிறகுதான் வீரர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அது இந்தியாவின் எல்லைப் பகுதி என்பதால் அங்கு பலத்த பாதுகாப்புகள் இருக்கும் அங்குள்ள சோதனைச் சாவடிகளைத் தாண்டி எப்படி 350 கிலோ வெடி பொருள்கள் உள்ளே கொண்டுவரப்பட்டது என தெரியவில்லை. பாதுகாப்பில் ஏதோ ஓட்டை உள்ளது’ எனத் தாக்குதல் நடந்த பிறகு சி.ஆர்.பி.எஃப் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.  இதற்கிடையில், புல்வாமாவில் தாக்குதல் நடக்கவிருப்பதாக முன்னதாகவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாகவும் அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாகவே இத்தனை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பாக தனக்கு நிறைய சந்தேகங்கள் எழுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  

ஏன் ஒரே நேரத்தில் 2,500 வீரர்களை அனுப்ப வேண்டும்? - புல்வாமா தாக்குதலில் சந்தேகங்களை அடுக்கும் மம்தா

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, ``புல்வாமா தாக்குதலில் இந்திய மக்கள் அனைவருக்குமே சந்தேகம் உள்ளது. அதே போன்று எனக்கும் சில சந்தேகங்கள் உள்ளன. அது எப்படி சரியாக நாடாளுமன்றத் தேர்தல், அரசின் கதவை தட்டும் நேரத்தில் இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. அமித் ஷாவும், மோடியும் அரசியல் பொதுக்கூட்டத்தில் தாக்குதல் தொடர்பாக பேசுகிறார்களே தவிர இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பதவி விலகத் தயாராக இல்லை. 

தாக்குதலுக்கு முன்னதாகவே இது தொடர்பாக அரசுக்குத் தெரிந்துள்ளது. உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் எப்படி இவ்வளவு உயிர்கள் பறிபோயின. பதான்கோட் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன். இதிலிருந்து அரசு புதிய போரைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது. எனக்கு ஒரு பெரும் சந்தேகம். அது எப்படி சரியாக தேர்தல் நேரத்தில் பாகிஸ்தான் மீது பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் ஏன் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதுவும்  2,500  வீரர்களை ஏன் ஒரே நேரத்தில் அனுப்ப வேண்டும். அதுவும் எப்படி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு இது போன்ற ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏன் ஒரே நேரத்தில் 2,500 வீரர்களை அனுப்ப வேண்டும்? - புல்வாமா தாக்குதலில் சந்தேகங்களை அடுக்கும் மம்தா

இதிலிருந்து பா.ஜ.க அரசு இனவாத தாக்குதலைத் தூண்ட முயற்சி செய்கிறது என்பதாகவே தெரிகிறது. இது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷித்தின் திட்டமிட்ட செயல். இதைவைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் மது குடித்து பல பொதுமக்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு அரசு 2 லட்சம் நிதியுதவி அறிவித்தது. ஆனால், நாட்டுக்காக உயிரைவிட்ட வீரர்களுக்கு இதுவரை எந்தத் தொகையும் அறிவிக்கப்படாதது ஏன். பொதுமக்கள் இறந்தால் அவர்கள் எப்படி இறந்தார்கள் என உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் அதுபோல இந்தத் தாக்குதல் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். எச்சரிக்கை விடுத்தும் ஏன் வீரர்கள் பாதுகாக்கப்படவில்லை என்று விசாரிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.