Published:Updated:

`தி.மு.கவுக்காக உழைத்த என் கணவர் இறந்தபோது யாரும் கண்டுக்கல்ல!’ - ஸ்டாலினிடம் குமுறிய பெண்

`தி.மு.கவுக்காக உழைத்த என் கணவர் இறந்தபோது யாரும் கண்டுக்கல்ல!’ - ஸ்டாலினிடம் குமுறிய பெண்
`தி.மு.கவுக்காக உழைத்த என் கணவர் இறந்தபோது யாரும் கண்டுக்கல்ல!’ - ஸ்டாலினிடம் குமுறிய பெண்

``தி.மு.க-விற்காக ஓடி ஓடி உழைத்த என் கணவர் இறந்தபோது, தி.மு.க சார்பில் ஒருவர் கூட அஞ்சலி செலுத்தவரவில்லை, இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இதுதான், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தி.மு.க கொடுக்கும் மரியாதையா?’’ என்று மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில், பெண் ஒருவர் குமுறினார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி அகரம்சேரியில் இன்று நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில், தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். குடி தண்ணீர், பாலாற்றில் பாலம், நிழற்குடம், மகளிர் சுயஉதவிக் குழு கடன், முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, மருத்துவமனை, பஸ் நிலையம், வீடு, கழிவறை எனப் பல்வேறு பிரச்னைகளைப் பெண்கள் முன்வைத்தனர். கூட்டத்தில் பேசிய பெண் ஒருவர், ``என் கணவர் 71 வயதுவரை தி.மு.கவிற்காக உழைத்தவர். அவர் இறந்தபோது, தி.மு.க சார்பில் ஒருவரும் அஞ்சலி செலுத்தவரவில்லை, இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இதுதான், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தி.மு.க கொடுக்கும் மரியாதையா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ``தொண்டரின் இறப்பிற்கு தி.மு.கவினர் அஞ்சலி செலுத்தாதது, கண்டிக்கத்தக்கது. வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார். ``அந்நியர்களிடம் கடன் வாங்கினால் கம்மல், மூக்குத்தியைக் கூட பறிகொடுக்க வேண்டியிருக்கிறது. கணவன்மார்கள் சம்பாதிக்கும் பாதிப் பணம், ஒயின்ஷாப்பிற்கே போய்விடுகிறது. ஒயின்ஷாப்பை மூடுங்கள்’’ என்றார் தர்பூசணி கடை வைத்திருக்கும் பெண் வியாபாரி ஒருவர். 

இதைத்தொடர்ந்து, ஸ்டாலின் பேசுகையில், ``உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால்தான் இப்பிரச்னைகள் வந்துள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு எங்களுக்கு அவசியமே வந்திருக்காது. 2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், ரூ.7,000 கோடி விவசாயக் கடனை, ஒரே கையெழுத்தில் கலைஞர்தான் முழுமையாக ரத்துசெய்தார். இப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் போராட்டம் நடத்தினால் சரியாக வராது என்று டெல்லியில் போய் பிச்சை எடுக்கும் போராட்டம் முதல் முழு நிர்வாணப் போராட்டம் வரை விவசாயிகள் நடத்திவிட்டனர். பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விவசாயிகளை அழைத்துப் பேசவில்லை. 


 

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வரப்போவதால், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ரூ.6,000 சிறப்பு நிதி அறிவித்துள்ளார் மோடி. அவரைப் பார்த்து இங்கு, எடப்பாடி பழனிசாமி ரூ.2,000 அறிவித்துள்ளார். இதெல்லாம் மக்களின் வரிப்பணம். தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால், மக்கள் எப்படியும் ஓட்டுப்போட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். வானத்தைக் கிழிப்பேன், வைகுண்டத்தைக் காட்டுவேன். மணலைத் திரிப்பேன் என்றார் மோடி. ஒவ்வொருருக்கும் ரூ.15 லட்சம் தருகிறேன் என்றுகூறி ஆட்சிக்கு வந்த மோடி, ஒன்றும் செய்யவில்லை’’ என்றார் காட்டமாக...