7 ப்ளஸ் 1... இது ஜெயலலிதா கணக்கு... 2009 அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி ஃபார்முலா ரிப்பீட்டு! | Current ADMK - PMK alliance is a repeat of 2009 alliance... an analysis!

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (19/02/2019)

கடைசி தொடர்பு:18:25 (19/02/2019)

7 ப்ளஸ் 1... இது ஜெயலலிதா கணக்கு... 2009 அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி ஃபார்முலா ரிப்பீட்டு!

10 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பா.ம.க. - அ.தி.மு.க. கூட்டணி... 2009-லும் 7 ப்ளஸ் 1 கணக்குப் போட்ட ஜெயலலிதா!

7 ப்ளஸ் 1... இது ஜெயலலிதா கணக்கு... 2009 அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி ஃபார்முலா ரிப்பீட்டு!

நாடாளுமன்றத் தேர்தல் பணியை வேகமாகத் தொடங்கிவிட்டது அ.தி.மு.க. அறிவாலயத்திலும் அ.தி.மு.க.விலும் பேசிக் கொண்டிருந்த பா.ம.க., ஒருவழியாக அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துவிட்டது. 7 தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ராஜ்ய சபா சீட்டும் தரப்பட்டுள்ளது. 

இதே ஃபார்முலாவைதான் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. கடைப்பிடித்தது. 2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ம.க.வுக்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. 2009 தேர்தலுக்குப் பிறகு இப்போதுதான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருக்கிறது பா.ம.க. அந்த 2009 தேர்தலில் என்ன நடந்தது?

பா.ம.க-  அ.தி.மு.க கூட்டணி

2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அ.தி.மு.க. 23 தொகுதிகளிலும் பா.ம.க. 7 தொகுதிகளிலும் ம.தி.மு.க. 4 தொகுதிகளிலும் சி.பி.எம், சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் தலா 3 இடங்களிலும் போட்டியிட்டன. பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியதோடு, ஒரு ராஜ்ய சபா சீட்டைக் கொடுத்தார் ஜெயலலிதா. தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணிக்கு 12 இடங்கள்தாம் கிடைத்தன. அ.தி.மு.க. 9 இடங்களிலும் ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றன. போட்டியிட்ட ஒரு தொகுதியில்கூட பா.ம.க. ஜெயிக்கவில்லை. 

பா.ம.க - அ.தி.மு.க கூட்டணி

2009 நாடாளுமன்றத் தேர்தலில் 28.3.2009 அன்றுதான் ஜெயலலிதாவுக்கும் ராமதாஸுக்கு இடையே தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தானது. 28.3.2009 தேதியின் கூட்டுத் தொகை 6. இந்தத் தேர்தலில் கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது 19.02.2019. இதன் கூட்டுத் தொகையும் 6-தான். 2009 தேர்தலும் 2019 தேர்தலிலும் தொகுதி ஒதுக்கீடு 7. அதே போல கூடுதலாக ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடும் 1-தான். 

2009 தேர்தலில் ஓர் இடத்தில்கூட பா.ம.க. ஜெயிக்காததால் கூட்டணி ஒப்பந்தப்படி அதற்கு அளிக்க வேண்டிய ராஜ்ய சபா சீட்டை ஜெயலலிதா தரவில்லை. இப்போதும் அப்படி நடக்குமா எனத் தெரியவில்லை.  

2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. படுதோல்வி அடைந்தபோது ``மிகப்பெரிய சதி செய்து பா.ம.க.வைத் தோற்கடித்தனர். எனக் கொதித்தார் ராமதாஸ். `` `துவண்டு போகமாட்டேன் புதியதாகப் போராடுவேன்’ என்று வாஜ்பாய் ஒரு முறை கூறியிருக்கிறார். இதைக் கொஞ்சம் மாற்றித் துவண்டு போகமாட்டோம், புதிதாகப் போராடுவோம், முன்பைவிட வேகமாகச் செயல்படுவோம் என்று கூறுகிறேன். எம்.பி. தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள வெற்றி முறையானது அல்ல. நேர்மையானது அல்ல. பா.ம.க. போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க. அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வெற்றி உண்மையானது அல்ல. மக்கள் விருப்பப்பட்டு அளித்த வெற்றி அல்ல. பணம் கொடுப்பது மட்டுமே தேர்தல் என்ற புதிய முறையை தி.மு.க.வினர் கொண்டுவந்துள்ளனர். இது போன்ற தி.மு.க.வின் கலாசாரம் ஏராளம் உள்ளது'' என அப்போது சீறினார் ராமதாஸ்.

அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி

2009 தேர்தலில் பா.ம.க. படுதோல்வியடைந்தபோது அந்தக் கட்சியின் மாம்பழச் சின்னத்தை அறிவாலயத்தில் தி.மு.க. தொண்டர்கள் நசுக்கி எதிர்ப்பைக் காட்டினார்கள். ஒரு லாரி முழுவதும் மாம்பழங்களைக் கொண்டு வந்து கொட்டி அதைக் காலால் மிதித்து வெறுப்பைக் காட்டினார்கள் தி.மு.க. தொண்டர்கள். எது எப்படியோ மீண்டும் மோடிதான் ஆட்சி அமைப்பார் என உறுதியாக நம்புகிறார் ராமதாஸ். அதனால்தான் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணியில் இணைந்திருக்கிறார்.  

கடந்த சட்டசபைத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு 23 லட்சம் வாக்குகள் பா.ம.க-வுக்குக் கிடைத்தன. பா.ம.க கூட்டணிக்கு வந்தால், வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றலாம் எனக் கணக்குப்போடுகிறது அ.தி.மு.க. அதனால்தான் கூட்டணி அமைத்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close