Published:Updated:

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி? - தி.மு.க-வுடன் முகுல் வாஸ்னிக் இன்று இறுதிப் பேச்சு

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி? - தி.மு.க-வுடன் முகுல் வாஸ்னிக்  இன்று இறுதிப் பேச்சு
காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி? - தி.மு.க-வுடன் முகுல் வாஸ்னிக் இன்று இறுதிப் பேச்சு

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்பதால் கூட்டணி குறித்த இறுதிப் பங்கீட்டில் கட்சிகள் தீவிரம் காட்டியுள்ளன. தமிழகத்தில் முதல் ஆளாக அ.தி.மு.க கூட்டணி தொகுதிப் பங்கீட்டைக் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பா.ம.க 7 தொகுதிகள், பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகள் என அ.தி.மு.க ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் இந்தக் கூட்டணியில் தே.மு.தி.க வர வாய்ப்பிருக்கிறது. அந்தக் கட்சியிடம் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

ஓரிரு நாளில் அதுவும் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. அ.தி.மு.க கூட்டணி நிலைமை இப்படியிருக்கத் தி.மு.க கூட்டணி இன்று இறுதி செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று அறிவிக்கப்படும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து ராகுல் காந்தியைச் சந்தித்தும் தமிழக தலைவர்கள் ஆலோசித்திருந்தனர். 

இதேபோல் தி.மு.க சார்பில் கனிமொழியும் கூட்டணி குறித்து நேற்று ராகுல் காந்தியிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி என்பதை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் இன்று தமிழகம் வரவுள்ளார். இதனால் இன்று காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.