கேன் வாட்டர் பற்றாக்குறையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை


சென்னை: கேன் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,"கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் சென்னை குடிநீர் வாரியம் பொது மக்களுக்கு தேவையான குடிநீரை வினியோகம் செய்து வருகிறது. தினமும் 83.10 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. குழாய் வினியோகம் போக 366 லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
100 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தேவையான பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதுதவிர ‘‘டயல்பார் வாட்டர்’’ என்ற திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதன்படி லாரிகள் மூலம் 6000 லிட்டர் ரூ.400, 9000 லிட்டர் ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் வேண்டும் என்று யார் போன் செய்தாலும் அந்த இடத்திற்கு லாரி மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.
##~~## |