வளைக்கும் அ.தி.மு.க...நெருக்கும் தி.மு.க - நெருக்கடியில் “த.மா.கா”! | Latest update on TMC's alliance talks

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (20/02/2019)

கடைசி தொடர்பு:18:20 (20/02/2019)

வளைக்கும் அ.தி.மு.க...நெருக்கும் தி.மு.க - நெருக்கடியில் “த.மா.கா”!

அ.தி.மு.க கூட்டணியில் இணைந்துவிடும் என்று கருதப்பட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், த.மா.கா-வுடன்  இரண்டு திராவிடக் கட்சிகளும் கடைசிக் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவது தெரியவந்துள்ளது. 

ஜி.கே.வாசன்

அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை ஏற்கெனவே இணைந்துவிட்டன. விஜயகாந்த்தின் தே.மு.தி.க-வுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இன்றும் பேச்சுார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைவதற்கான பேச்சுார்த்தை இன்று காலை தொடங்கியுள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய நட்சத்திர விடுதி ஒன்றில் த.மா.கா சார்பில் அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவரும், அ.தி.மு.க வின் சார்பில் மூத்த அமைச்சர் ஒருவரும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறார்கள். ஏற்கெனவே அ.தி.மு.க-வுடன் நடைபெற்ற முதல்சுற்று பேச்சுவார்த்தையில் மூன்று தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த சீட் பேரம் குறித்து இன்றும் பேசப்பட்டுவருகிறது. இரண்டு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் வேண்டும் என இறுதியாக த.மா.கா  தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு லோக்சபாவிற்கு அ.தி.மு.க தலைமை ஓ.கே சொல்லும் மனநிலையில் உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்றுவரும்நிலையில், தி.மு.க தரப்பிலிருந்து த.மா.கா-வின்  முக்கியப் பிரமுகரைத் தொடர்புகொண்டு, மூன்று தொகுதிகள் வரை தருகிறோம், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று சொல்லியுள்ளார்கள். 

த.மா.கா தரப்பில் ஏற்கெனவே தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்களது ரெஸ்பான்ஸ் சரியில்லை என்றே அ.தி.மு.க பக்கம் தாவினார் வாசன். அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், இப்போது மீண்டும் தி.மு.க தரப்பிலிருந்து பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்கள். ஆனால், த.மா.கா தரப்பு அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பதில் உறுதியாகவிட்டது. இரண்டு தொகுதிகள் அந்தக் கட்சிக்கு வழங்கப்படும். நாளை இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் த.மா.கா-வினர். 
 


[X] Close

[X] Close