Published:Updated:

கட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்!’

கட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்!’
பிரீமியம் ஸ்டோரி
கட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்!’

படம்: குமரேசன்

கட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்!’

படம்: குமரேசன்

Published:Updated:
கட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்!’
பிரீமியம் ஸ்டோரி
கட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்!’

காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கைகளில் நீதித்துறை சீர்திருத்தங்கள் பற்றி சொல்லப்பட்டிருந்தாலும், நீண்டகால கோரிக்கைகளான உச்ச நீதிமன்றத்துக்கு கிளை நீதிமன்றங்கள் அமைத்தல் மற்றும் நீதிமன்றங்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்களை இருகட்சிகளுமே பேசவில்லை என்கிற விமர்சனம் நீதித்துறையிலிருந்து எழுந்துள்ளது.

கட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்!’

பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில், நீதிமன்றங் களைப் பலப்படுத்துவது, நடைமுறைச் சட்டங்களை எளிமையாக்குவது, இந்தியாவில் சமரசத் தீர்ப்பாயங்களை வலிமை வாய்ந்ததாக மாற்றுவது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், இதே தலைப்புகளுடன், ‘தேசிய நீதிபதிகள் ஆணையம் அமைக்கப்படும். உச்ச நீதிமன்றத்தை இரண்டாகப் பிரித்து, அரசியல் சாசன நீதிமன்றம் தனியாகவும், மேல் முறையீட்டு நீதிமன்றம் தனியாகவும் அமைக்கப்படும். இவற்றில் அரசியல் சாசன நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் தேசிய மற்றும் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டும் விசாரிக்கும். அனைத்து ஆணையங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் நீதிபதிகள் ஓய்வு பெறுவதற்கான வயது 65 என நிர்ணயிக் கப்படும்’ என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதேசமயம், இந்திய நீதிமன்றங்களில் மூன்று கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கு விசாரணையில் தாமதத்தைக் குறைப்பது, நீதிபதிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவது, நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமே இதற்குத் தீர்வு தரும். ஆனால், இதைப்பற்றி இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் எதுவுமே பேசவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்!’

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், “இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 130, உச்ச நீதிமன்றத்துக்குக் கிளைகள் இருப்பதைச் சட்டபூர்வமாக அங்கீகரிக் கிறது. அந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவரக்கோரி பல வருடங் களாக வழக்கறிஞர்கள், சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் போராடி வருகிறார்கள். தெற்கு, மேற்கு, கிழக்கு பிராந்தியங்களில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்தாலே பெருமளவில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறையும். இதுநாள் வரையில் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில்தான் பெண்கள், பிற்படுத்தப்பட்ட பட்டியல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாகப் பதவி ஏற்றுள்ளனர். நீதிபதி நியமனங்களில் பன்மைத்துவத்தை நிலைநாட்டுவது அவசியம். அதற்காக நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியத்தை விரிவுபடுத்துவது உட்பட பல்வேறு முறைமைகளைக் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தை, அரசியல் சாசன நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் என்று பிரிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்த மேல்முறையீட்டு நீதிமன்றம் கீழமை, உயர்நீதி மன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடைப்பட்ட நீதிமன்றமாகக் கொண்டுவருவது அபத்தமானது. அது வழக்குகளின் முடிவை மேலும் தாமதமாக்கும்” என்றார்.

‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’ என்பார்கள். நீதித்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களைத் தாமதிப்பதும் அநீதிதான்!

- ஜெனிஃபர்.ம.ஆ, மோகன்.இ

படம்: குமரேசன்