சந்தோஷ்குமார், கும்பகோணம்.
மீண்டும் மோடி பிரதமரானால், அந்த 15 லட்சத்தை வட்டியும் முதலுமாக வங்கியில் போட்டுவிடுவார்தானே?

எந்த 15 லட்சம்? (‘எந்த ஏழு பேர்?” என்று ரஜினிகாந்த் கேட்டது உங்களுக்கு நினைவில் வந்தால், நான் பொறுப்பல்ல)‘

திருச்சிற்றம்பலம்’ சுரேஷ், திருக்கண்டேஸ்வரம், கடலூர்.

பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கின் குற்றவாளி களுக்கு இன்னும் ஏன் தீர்ப்பு வழங்கப்படவில்லை?

ம்க்கும்... பாலியல் விவகாரங்களில் பாதிக்கப்படும் பெண்கள்/குழந்தைகளின் பெயர், புகைப்படம், அடையாளங்களை வெளியிடக்கூடாது என்பது சட்டம். மீறுவது கிரிமினல் குற்றம். இந்தக் குற்றங்களைச் செய்த மாவட்ட எஸ்.பி தொடங்கி, இன்ஸ்பெக்டர் வரை யாரும் தண்டிக்கப்படவே இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இடமாற்றம்தான் செய்யப்பட்டார்கள். இதே குற்றத்தைச் செய்த தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு அதுவும்கூட இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு நடுவே, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப் படுவார்கள் என்று எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. ஆனாலும், தமிழக மக்கள் நம்பிக் காத்திருக்கிறார்கள். இது அவர்கள் எந்த அளவுக்குச் சட்டத்தை மதிக்கிறார்கள் என்பதற்குச் சரியான சான்று. நமது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமர்வுகளும் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதால், காலம் தாழ்த்திய தீர்ப்புகள்தான் வழங்குகின்றன. குற்றவாளி இறந்துவிட்டால், அவர் வழக்கிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். என்ன செய்வது?

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
நடிகர் விஜய் கப்சிப் என்று ஆகிவிட்டாரே. இனி அடுத்த படம் வெளியாகும்போதுதான் பொங்கி எழுவாரா?

‘இளைய தளபதி’யாக இருந்தவர், ‘தளபதி’யாகவும் ஆகிவிட்டாரே. பிறகு, ‘மூத்த தளபதி’ போலத்தானே அவரும் பொங்குவார்!

எம்.தமிழ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர்.
இதுவரை நடந்த தேர்தல்களில் வாக்களித்த அனுபவம் கழுகாருக்கு இருக்கிறதா?

நோ.மு. கிடையாது. நோ.பி. உண்டு.

அனிதா, சேலையூர்.
மீண்டும் மீண்டும் அதே கழகங்களைத் தேர்ந்தெடுப் பதைவிட நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என்று புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து ஏதாவது மாற்றம் வருகிறதா என்று பார்க்கலாம்தானே?

தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் வராதவரையில், செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து ஆட்சியில் அமர்ந்தால்கூட, எதையும் மாற்றிவிட முடியாது.

ஆர்.பழனிசாமி, இராவணாபுரம்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொடுக்கப்படும் அளவுக்கு இந்திய விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கப் படுவதில்லை என்று இந்தியாவின் வர்த்தகத்துறை செயலாளர் அனுப் வாத்வான் கூறியுள்ளாரே?

உண்மைதான். விவசாயம் செய்வதற்கு மட்டுமல்ல, விவசாயம் செய்யாமலிருக்கவும் அந்த நாடுகளில் மானியங்கள் உண்டு. அதாவது, தேவைக்கு அதிகமாக விளைச்சல் வரும் என்று தெரிந்தால், மேற்கொண்டு அதே பயிர்கள் விளைவிக்கப்படுவதை அந்த நாடுகள் தடுக்கும். இதனால் வருவாய் பாதிக்கப்படும் விவசாயி களுக்கு மானியங்களும் கொடுக்கப்படும். ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மட்டும் மானியங்களைக் கொடுக்காதீர்கள் என்று உலக வர்த்தக ஒப்பந்தத்தைக் காட்டி மிரட்டிக் கொண்டே இருக்கின்றது உலக வர்த்தக மையம். குறிப்பாக, விவசாயிகளுக்கான மானியங்களைக் குறைக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். இந்திய விவசாயத்தை முடிந்தவரை அழித்துவிட்டு, வெளிநாட்டிலிருந்து விளைபொருள்களை இறக்குமதி செய்யவைப்பது தான் அவர்களின் திட்டம். அப்போதுதானே, அவர்களுடைய வர்த்தகம் செழிக்கும்.

தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி-10
‘தேர்தலில் போட்டியிடாததால், நானும் காந்திதான்’ என்கிறாரே ராமதாஸ்?

ஸ்ஸ்ஸ்ஸ்... ப்ப்பா... முடியல!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.
தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் பிரதமர் ஆகவே முடியாதா?

அதற்கெல்லாம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாய்ப்பே இல்லை. தகுதியும் மக்கள் ஆதரவும் வேண்டுமே!

அ.குணசேகரன், புவனகிரி.
தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

வாக்களித்தவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிடைக்கும் அதே தண்டனை, அவர்களுக்கும் நிச்சயமாக உண்டே. ஆனாலும், வாக்களிக்காமல் இருந்ததற்காக கூடுதல் தண்டனை என்னவென்று யோசிக்கலாம். அதற்கு முன்பாக, அனைவரும் எளிதாக ஓட்டுப்போடும் வகையில் யோசித்தால், இதற்குத் தீர்வு கண்டுவிட முடியும். அதாவது, உலகின் எந்த மூலையிலிருந் தாலும் ஓட்டுப்போடுவதற்கு டிஜிட்டல்தான் தீர்வு. ஆனால், ஏற்கெனவே எந்திர வாக்குப் பதிவுக்கே இங்கே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் எல்லாமும் சாத்தியமாகக்கூடும். அத்தகைய சூழலிலும், ஓட்டுப் போடாமல் இருந்தால் வேற்றுக் கிரகத்துக்கு நாடு கடத்துவதைக்கூட யோசிக்கலாம்.

உ.குமரவேல் ஆசான், ஆலப்பாக்கம், சென்னை-116.
குடித்துக் குடித்து நாடே குட்டிச் சுவராகிக் கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருபவர்கள், குடிக்கு எதிராக முதல் கையெழுத்தைப் போடுவார்களா?

நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். ஆனாலும், தமிழகம் என்பது இந்தியாவுக்குள்தானே. எனவே, மத்தியில் பிரதமராக அமர்பவர்கூட, தமிழகத்தின் ‘குடி’யை நிறுத்த நினைத்தால் நிறுத்தலாம். ஜி.எஸ்.டி, நீட் என்றெல்லாம் நீட்டுபவர்களுக்கு இது பெரிய விஷயமில்லை. ஆனால், ‘கூட்டணிப் பார்ட்டி’களும் மதுவிலக்குக்கு ‘சியர்ஸ்’ சொல்லவேண்டுமே!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
வைகோவின் பலம்... பலவீனம்?

பேச்சு... பேச்சு!

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டிணம்.
உயிரோடு இருக்கும்போது உடன்பிறப்பாக இருந்தாலும் ஓயாமல் உளைச்சலைக் கொடுத்துவிட்டு, உயிர்போன பின்பு பாசக்கார வேஷம் போடும் மனிதர்களை என்னவென்பது?

உறவுகள் நாமாக உருவாக்கியவை. நாமாக உருவாக்கிக்கொண்டவை நிலைப்பதில்லை. இயற்கையாக உருவானதுதான் எப்போதுமே நிலைக்கும்!

‘மன்னை’ கு.ஜோதிமணி, மன்னார்குடி.
ஒருவேளை கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் தேர்தலில் தோற்றுவிட்டால், வைகோவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைக் கொடுப்பாரா மு.க.ஸ்டாலின்?

ஏன்... இப்படி?

பொன்விழி, அன்னூர்.
‘சவுக்கிதார் பொன்விழி’ என்று நண்பர்கள் என்னை அழைக்கிறார்கள். என் எதிர்காலம் பற்றிக் கழுகாரால் கணிக்கமுடியுமா?

கிளி, எலி, ஆக்டோபஸ் எல்லாம்கூட சோதிடம் பார்க்க ஆரம்பித்துவிட்டன. கழுகு இன்னமும் அந்த வேலையில் இறங்கவில்லை.

வி.சண்முகம், திருவாரூர்.
இந்தத் தேர்தலில், பணத்தை வாரி இறைத்த கூட்டணிகளின் இடத்தை வரிசைப்படுத்த முடியுமா?

அரசு பலத்துடன் ஆயிரங் களாக அள்ளிக்கொடுத்து அசுர ஆட்டமாடிய அ.தி.மு.க-வுக்குத் தான் முதலிடம். கடும்போட்டி கொடுத் தாலும் தி.மு.க-வுக்கு இரண்டாம் இடமே. அதேசமயம், பல இடங்களில் தினகரனின் அ.ம.மு.க முட்டி மோதி இரண் டாம் இடத்தைப் பிடித்ததும் நிதர்சனமே!

வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு.
அவநம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் இடைவெளி எவ்வளவு தூரம்?

ஏப்ரல் 18 முதல் மே 23 வரை உள்ள இடைவெளிதான்.

கே.கார்த்திகேயன், குடவாசல்
உண்மையைச் சொல்லுங்கள், வேலூரில் மட்டும்தான் பணவிளையாட்டா?

இதெல்லாம் ஆளுங்கட்சியின் திருவிளையாட்டு. தேர்தல் ஆணையம் நியாயமாக நடக்கிறது என்பதை நிரூபிக்க நினைத்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 நாடாளுமன்றத் தொகுதிகள், இடைத்தேர்தல் நடக்கும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!