Published:Updated:

சிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி? - ஆண்டிபட்டி அவலம்!

சிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி? - ஆண்டிபட்டி அவலம்!
பிரீமியம் ஸ்டோரி

பெயரில் ஆண்டியை வைத்துக்கொண்டு கட்டுக்கட்டாக பணம் புரளும் பணக்காரத் தொகுதியாக இருக்கிறது ஆண்டிபட்டி. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அ.ம.மு.க தேர்தல் அலுவலகத்தின் மேல்தளத்திலுள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில், ஏப்ரல் 16-ம் தேதி இரவு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியுள்ளது. சோதனையின்போது ஏராளமான பணத்தை அ.ம.மு.க-வினர் தூக்கிக்கொண்டு ஓடியதால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீஸார் எச்சரித்தனர். மேற்கண்ட சோதனையில், கைப்பற்றப்பட்ட பணமான ஒன்றரை கோடிக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

சிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி? - ஆண்டிபட்டி அவலம்!

ஆண்டிபட்டி பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில், கட்டுக்கட்டாகப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் அலுவலருக்கு புகார் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு உதவி ஆட்சியர் தினேஷ்குமார், ஆண்டிபட்டி டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் விரைந்தனர். அப்போது, அ.ம.மு.க கட்சி அலுவலகத்தின் மேல்தளத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில், பண்டல் பண்டலாகப் பணம் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக அந்த அலுவலகக் கதவை அதிகாரிகள் வெளிப் பக்கமாகப் பூட்டினர். உள்ளே தேனி மாவட்ட அ.ம.மு.க துணைச் செயலாளர் பழனி உட்பட நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். வெளியில் காவலுக்கு போலீஸார் நிறுத்தப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கலெக்டருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி அங்கு விரைந்து வந்தார். இதற்குள், அ.ம.மு.க-வைச் சேர்ந்த சுமார் 150 பேர் அங்கு திரண்டு, உள்ளே சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஒருகட்டத்தில் அலுவலகக் கண்ணாடி உடைக்கப்பட்டுப் பணத்தை அள்ளிக்கொண்டு பலர் ஓட்டம்பிடித்தனர். இதைத் தடுக்க முயற்சி செய்த வருவாய் அலுவலர் கந்தசாமியைத் தாக்க முற்பட்டனர். நிலைமையைச் சமாளிக்க போலீஸார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தார்கள். இதில் அ.ம.மு.க-வினர் சிதறி ஓடினர். உள்ளே சிக்கி இருந்த அ.ம.மு.க பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். கட்சியினர் எடுத்துக்கொண்டு ஓடியதுபோக, அந்த அறைக்குள் மீதம் இருந்த 1.48 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி? - ஆண்டிபட்டி அவலம்!

இதில் தொடர்புடைய செல்வம், பொன் முருகன், பழனி, சுமன்ராஜ், பிரகாஷ்ராஜ், மது ஆகிய ஆறு பேர்மீது வழக்குப் பதியப்பட்டது. தவிர, அடையாளம் தெரியாத நபர்கள் என்று 150 பேர்மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பணம் மாவட்டக் கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘கட்சிக்காரர்கள் பணத்தை எடுக்காமல் இருந்திருந்தால், மொத்தம் ஆறு கோடி ரூபாய் பணம் இருந்திருக்கலாம்’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண பண்டலின்மீது வார்டு எண், பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது. வார்டு எண்களை வைத்துப்பார்க்கும்போது அவை ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. 

சிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி? - ஆண்டிபட்டி அவலம்!

இதைத் தொடர்ந்து அ.ம.மு.க கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் தேனி நாடாளுமன்ற வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பணம் இருந்ததாகக் கூறப்படும் வணிக வளாகம், அ.தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமானது. இது ஓ.பன்னீர்செல்வத்தால் ஜோடிக்கப்பட்ட நாடகம். வழக்குப் பதிவுசெய்யும் போது, அடையாளம் தெரியாத 150 பேர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தேர்தலின்போது பூத்களில் இருக்கும் எங்கள் ஆட்களைக் கைது செய்யக்கூட இதுபோன்று திட்டமிடப்பட்டிருக்கலாம்” என்றார். சிறிது நேரத்தில், தேர்தல் நடத்தை விதியை மீறி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததற்காக தங்க தமிழ்ச்செல்வன்மீது வழக்குப் பதிவுசெய்யப் பட்டது.

சிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி? - ஆண்டிபட்டி அவலம்!

அதிகாரிகள் முன்னிலையில் கைது செய்யப்பட்டது அ.ம.மு.க நிர்வாகிகள். ஒரே நேரத்தில் 150-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க-வினர் கூடியிருக்கிறார்கள். ஆனால், நடந்த சம்பவத்துக்கும், கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

- எம்.கணேஷ்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி