Published:Updated:

`இனிமேலும் ஏமாறுவதை தாங்க முடியாது!' - பா.ம.க.விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா பேட்டி

`இனிமேலும் ஏமாறுவதை தாங்க முடியாது!' - பா.ம.க.விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா பேட்டி
`இனிமேலும் ஏமாறுவதை தாங்க முடியாது!' - பா.ம.க.விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா பேட்டி

`இனிமேலும் ஏமாறுவதை தாங்க முடியாது!' - பா.ம.க.விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா பேட்டி

`இனிமேலும் ஏமாறுவதை தாங்க முடியாது!' - பா.ம.க.விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா பேட்டி

அ.தி.மு.க.வுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி என்ற அறிவிப்பு வெளியானதும் பா.ம.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்த ராஜேஸ்வரி ப்ரியா, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். `ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
  கெட்டான் எனப்படுதல் நன்று' என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி அவர் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவரைச் சந்தித்து சில கேள்விகளை கேட்டோம். 

 அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்ததால் மட்டும்தான் கட்சியிலிருந்து விலகினீர்களா அல்லது வேறு எதுவும் காரணமா?

``திராவிட கட்சிகளுடன் பா.ம.க. கூட்டணி வைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அதுவும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் விலகினேன்". 

 உங்களின் முடிவை கட்சித் தலைமைக்கு முறைப்படி கூறினீர்களா? 

 ``இல்லை. இது என்னுடைய சொந்த முடிவு. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் ஆதரவு தெரிவிப்பதாக பா.ம.க. தலைமை முடிவு செய்துள்ளது. அந்த அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அதற்காக பா.ம.க.வை குறைச்சொல்ல விரும்பவில்லை. இதனால்தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தேன்". 

`இனிமேலும் ஏமாறுவதை தாங்க முடியாது!' - பா.ம.க.விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா பேட்டி

உங்களின் முடிவை கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டதா? 

``நான் பா.ம.க.விலிருந்து விலகுவதாக அறிவித்ததும் என்னுடைய முடிவை சில அரசியல் கட்சித் தலைவர்கள்  பாராட்டி போனில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதோடு என்னை அவர்கள் கட்சியில் சேரும்படி அழைப்பும் விடுத்தனர். ஆனால், நான் எந்தக்கட்சியிலும் சேரும் மனநிலையில் இல்லை. என்னுடைய முடிவை நாகரிகமாக சொல்லியிருப்பதால் என்னை அநாகரிகமாக யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியிலிருந்து நிர்வாகிகளுக்கு தகவல் செல்லப்பட்டுள்ளது".

பா.ம.க.வில் நீங்கள் சேர்ந்ததற்கான நோக்கம்?

 ``வேறு ஒன்றுமில்லை. தமிழகத்தில் அதிகம் படித்த தலைவர்களில் ஒருவர் ராமதாஸ். இதனால்தான் அந்தக்கட்சியில் சேர்ந்தேன். என்னுடைய சொந்த பணத்தைத்தான் செலவு செய்தேன். அந்தக்கட்சியில் சேருவதற்கு முன் வீட்டில் சிலர் தங்களின் கருத்துகளைக் கூறினர். ஆனால், என்னுடைய கணவர் பிரவின்குமார், எனக்கு உறுதுணையாக இருந்தார். தற்போதும் இருந்துவருகிறார்". 

 பா.ம.க.வில் எப்போது சேர்ந்தீர்கள், உங்களுக்கு எப்போது பதவி வழங்கப்பட்டது?. 

``நான் பிறந்தது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி. என்னுடைய சொந்த ஊர் வேதாரண்யம். பி.எஸ்சி. ஐ.டி. முடித்தவுடன் சிங்கப்பூரில் சிஸ்டம் மேலாளராக மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளத்தில் கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றினேன். அதன்பிறகுதான் சென்னை வந்தேன். 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் பா.ம.க-வில் சேர்ந்தேன். அன்புமணி ராமதாஸை பிரபலமான சினிமா இயக்குநர் ஒருவர் மூலம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உலக மகளிர் தினத்தையொட்டி எனக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பா.ம.க.வை என்னுடைய குடும்பமாக கருதி உழைத்தேன். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். இதுவரை 70-க்கும் மேற்பட்ட மேடைகளிலும் 80-க்கும் மேற்பட்ட விவாத மேடைகளிலும் பங்கேற்றுள்ளேன். எனக்கு உயிரைப்பற்றிய பயம் கிடையாது. இதனால்தான் அ.தி.மு.க.வை பா.ம.க. அதிகம் விமர்சித்த காலகட்டத்தில் நானும் அமைச்சர்கள் குறித்து யூடியூப்பில் பேசியிருக்கிறேன். அதனால் வந்த மிரட்டல்களை துணிச்சலுடன் சந்தித்தேன்" 

 
 

`இனிமேலும் ஏமாறுவதை தாங்க முடியாது!' - பா.ம.க.விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா பேட்டி

பா.ம.க.விலிருந்து விலகிய நீங்கள் வேறு ஏதாவது கட்சியில் சேர்வீர்களா? 

 ``கண்டிப்பாக இல்லை. வேற எந்த அரசியல் கட்சிகளிலும் சேரமாட்டேன். இளைஞர்களுக்காக புதிய கட்சியைத் தொடங்கலாம் என்ற மனநிலையில் உள்ளேன். எனக்கு பதவி, அதிகாரம் மீது எப்போதும் ஆசை இல்லை. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். நான் சிங்கப்பூரில் இருந்தபோது அங்குள்ள அரசியல் தலைவர்கள் மக்களின் சேவகர்களாக இருப்பதை நான் பார்த்தேன். ஆனால், தமிழகத்தில் அந்த நிலைமை இல்லை. இங்குள்ளவர்கள் மக்களுக்கு தொந்தரவாகத்தான் இருக்கின்றனர்". 

 திருக்குறளை சுட்டிக்காட்டி விலகியதற்கான காரணம் என்ன?

 ``தமிழர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷமான திருக்குறள் பிடிக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க என்ற அறிவிப்பு வெளியானதும் திருக்குறளில் மானம் என்ற அதிகாரத்தை படித்தேன். அதனால்தான் அந்தக் குறளை சுட்டிக் காட்டினேன். அது, எனக்கு மன ஆறுதலாக இருந்தது. அந்த இரண்டு வரி போதும்". 

`இனிமேலும் ஏமாறுவதை தாங்க முடியாது!' - பா.ம.க.விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா பேட்டி

உங்களின் புதிய கட்சி எப்போது உதயமாகும்? 

 ``இன்னும் இரண்டு தினங்களில் அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளேன். நான் தொடங்கவுள்ள கட்சியில் சேவை மட்டுமே இருக்கும். இன்னொரு கட்சியில் சேர மாட்டேன். எனக்கு அதிகாரமும் பதவியும் வேண்டாம். உயிரைப்பற்றிய கவலையும் இல்லை. என்னை நம்பியுள்ளேன். எனக்கு ஆதரவாக இரண்டு பேர் இருந்தாலே போதும். இதுவரை ஏமாற்றங்களை தாங்கியுள்ளேன். இனிமேலும் ஏமாறுவதை தாங்க முடியாது. நான் இன்னொரு கட்சியில் சேர்ந்து அவர்கள் சுயநலத்துக்காக ஒரு முடிவை எடுத்தால் அங்கிருந்து விலக நேரிடும். அப்போது என்னைத்தான் குறைசொல்வார்கள். எனவேதான் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளேன். எனக்கு தலைமைப்பண்பு இருக்கிறதா என்பதை மக்கள், சமூகம் முடிவு செய்யட்டும். எனக்கு சுயநலம் கிடையாது. ராமதாஸையும் அன்புமணி ராமதாஸையும் எப்போதும் குறை சொல்ல மாட்டேன்". 

அடுத்த கட்டுரைக்கு