Published:Updated:

`2 எம்.எல்.ஏ-க்களுக்கு தொல்லைகொடுக்கிறாங்க; விடமாட்டேன்!' - எதிர்க்கட்சிகள்மீது பாயும் புதுச்சேரி சபாநாயகர்

புதுச்சேரியில், கடந்த 2016ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆட்சி அமைக்க, 16 இடங்கள் வேண்டும். அதன்படி 15 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, தி.மு.க ஆதரவுடன் ஆட்சி செய்துவருகிறது. 8 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான காய்களை நகர்த்திவருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கத்தின் அறையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, நமச்சிவாயம், அரசு கொறடா அனந்தராமன் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் விஜயவேணி, தீப்பாய்ந்தான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ விஜயவேணி, ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் இருவரும் தங்களை அணி மாறச் சொல்லி எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் செல்போனில் தொல்லைகொடுக்கிறார்கள் என்று சொன்னதோடு, சபாநாயகரிடம் அதற்கான செல்போன் உரையாடல் ஆடியோவையும் காட்டி புகார் அளித்தனர்.

`2 எம்.எல்.ஏ-க்களுக்கு தொல்லைகொடுக்கிறாங்க; விடமாட்டேன்!' - எதிர்க்கட்சிகள்மீது பாயும் புதுச்சேரி சபாநாயகர்

இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் வைத்திலிங்கம், ``அரசியல் சார்பின் அடிப்படை நிலையையே மாற்றுவதற்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தொல்லைகொடுத்து வருவதாக, எம்.எல்.ஏ-க்கள் விஜயவேணி மற்றும் தீப்பாய்ந்தான் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரின் மீது எப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறேன். அது முடிந்ததும், சபாநாயகர் என்ற முறையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.