அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாயார் போட்டி! - ஜெ.குரு வன்னியர் சங்கம் அறிவிப்பு | Guru's mother Will contest against Anbumani, announces supporters

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (22/02/2019)

கடைசி தொடர்பு:17:21 (22/02/2019)

அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாயார் போட்டி! - ஜெ.குரு வன்னியர் சங்கம் அறிவிப்பு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி களம் சூடுபிடித்திருக்கும் வேளையில்., அ.தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-பா.ஜ.க-பா.ம.க கூட்டணி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 'வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க போட்டியிடும் 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி' என மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கத் தலைவர் வி.ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கத் தலைவர் வி.ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``இனி வன்னியர்கள் பெயரைச் சொல்லி ராமதாஸும் அன்புமணியும் வாக்கு சேகரிக்கக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க போட்டியிடும் ஏழு தொகுதிகளிலும் தோற்பது உறுதி.

ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாகத் தங்களை கூறிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாஸும் அன்புமணியும் இழிவுபடுத்தி வருகின்றனர். கடல் இருக்கும் வரை, பார் இருக்கும் வரை கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு, தற்போது எதற்காக அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தனர்.

அ.தி.மு.க ஆட்சியில் 70 ஆயிரம் கோடி ஊழல் என்று புத்தகம் வெளியிட்ட ராமதாஸ், அந்தப் பணத்தில் பங்கு கேட்டுள்ளாரா. இனியும் ராமதாஸை வன்னிய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார். 

போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் பா.ம.க தோற்கும். அன்புமணியை எதிர்த்து, காடுவெட்டி குருவின் தாயார் போட்டியிடுவார். 10 அம்ச கோரிக்கைகளை ஏன் பா.ஜ.க-விடம் விதிக்கவில்லை. மது ஒழிப்புப் போராட்டம் செய்த அன்புமணி, படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று கோருவது ஏன். இனி வன்னியர்கள் பெயரைச் சொல்லி ராமதாஸும் அன்புமணியும் வாக்கு சேகரிக்கக் கூடாது" என்று காட்டமாகத் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close