`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்?' - விஜயபிரபாகரன் கேள்வி | vijayakanth son vijayaprabhakaran slams other political parties

வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (23/02/2019)

கடைசி தொடர்பு:11:51 (23/02/2019)

`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்?' - விஜயபிரபாகரன் கேள்வி

தே.மு.தி.க-வுக்கு இரண்டு சதவிகிதம் வாக்குகள்தான் உள்ளது எனவும், விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்றும் கூறுபவர்கள், ஏன் எங்க வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கீறீர்கள். எங்ககிட்ட வைத்துக் கொள்ளாதீர்கள், நாங்கள் ஓங்கி கொடுக்கின்ற கட்சி. வரும் எம்.பி தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி இல்லை என கும்பகோணத்தில் விஜயகாந்தின் மகன் விஜயபிராபகரன் பேசியுள்ளார்.

விஜயபிரபாகரன்

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை வந்தார். முதலில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மாநில அளவில் நடைபெறும் இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் கும்பகோணம் சென்ற விஜயபிரபாகரன் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது, ``காவிரி டெல்டா பகுதியில் கடந்த காலங்களில் 58 சதவிகிதம் விவசாயம் நடைபெற்றது. தற்போது 7 சதவிகிதம் தான் விவசாயம் நடைபெறுகிறது. காவிரியில் தண்ணீர் வராரததால் 51 சதவிகிதம் விவசாயம் செய்ய முடியாமல் போய் விட்டது.

விஜயபிரபாகரன்

விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால், காவிரியில் தண்ணீர் வரும். மேலும், பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவிப்பார். அப்படி செய்யாவிட்டால், ஏன் செய்யவில்லை என சட்டையைப் பிடித்துக் கேட்கலாம். அதனால் விஜயகாந்த்துக்கு வாய்ப்புக் கொடுங்கள். தே.மு.தி.கவைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் பயப்படாதீர்கள். வருங்காலத்தில் விஜயகாந்தின் ஆட்சி இல்லை என்றால் எதுவும் இல்லை. விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போல் தான் வருவார். ஆனால், பன்றிகள்தான் கூட்டமாக வரும். அதுபோலதான் சிலர் உள்ளனர்.

விஜயபிரபாகரன்

தே.மு.தி.க-வுக்கு இரண்டு சதவிகிதம் வாக்குகள்தான் உள்ளது, விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள் ஏன் எங்க வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கீறீர்கள். எங்ககிட்ட வைத்துக் கொள்ளாதீர்கள், நாங்கள் ஓங்கிக் கொடுக்கின்ற கட்சி. வரும் எம்.பி தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி இல்லை. தற்போது டெல்லிக்கு குரல் கொடுப்பதற்கு சரியான தலைவர் இல்லை. தமிழ்நாட்டுக்கு திட்டங்களை செய் என்று சொல்லும் தலைவரை கொண்டுவர வேண்டும். இப்போது உள்ளவர்கள் போல் வாயை மூடிகொண்டு சுற்றுகிற ஆள் விஜயகாந்த் இல்லை. இப்போதுள்ள கட்சியினரிடையே தப்பு பண்ணாத தலைவராக விஜயகாந்த் உள்ளார். அவர் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. வரும் எம்.பி. தேர்தலில் எதிரிகளுக்கு சவுக்கடி கொடுத்து அவர்களின் முகத்திரையை கிழிக்கணும். எனக்கும் விஜயகாந்த்துக்கும் தஞ்சாவூர் தொகுதி மேல்தனி பாசம் உண்டு" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close