Published:Updated:

`ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்!’ - மு.க.ஸ்டாலின் சூளுரை

`ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்!’ - மு.க.ஸ்டாலின் சூளுரை
`ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்!’ - மு.க.ஸ்டாலின் சூளுரை

``நரேந்திர மோடி ஆட்சியால் இந்தியா 15 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்று விட்டது. மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வருகிறது ராகுகாந்திதான் அடுத்த பிரதமர்'' என தி.க நடத்தும் சமூக நீதி  மாநாட்டில் தி.மு.க தலைவர் ஸ்டாலின்  பேசினார்.

`ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்!’ - மு.க.ஸ்டாலின் சூளுரை

தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் இரண்டு நாள்கள் சமூகநீதி மாநாடு நடைபெற்றது. இன்று நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது, தாய் வீட்டுக்கு வந்து இருக்கக்கூடிய வகையில்தான் நான் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளேன். திராவிட கழகம் தன்னுடைய திராவிட உணர்வுக்கு உயிர் கொடுத்துள்ளது. தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக இந்த மாநாட்டில் நான் பங்கேற்பது பூரிப்படைய வைக்கிறது. ஆசிரியர் வீரமணி அழைத்தால் நான் எப்போதும் எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலேயும் எங்கும் வருவேன்.

`ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்!’ - மு.க.ஸ்டாலின் சூளுரை

முதன் முதலில் சிறைக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு மிசா சட்டத்தின் மூலம்தான் கிடைத்தது. நான் சிறையில் இருக்கும்போது எனக்கு திராவிட உணர்வை ஊட்டி வளர்ந்தவர் வீரமணி. நான் அவரை அப்பொழுது எப்படி பார்த்தேனோ அப்படியே தற்போதும் இளமையாக இருக்கிறார். இறக்கும் வரை வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்கான பயணத்தை மேற்கொண்டவர் தந்தை பெரியார். தலைவர் கலைஞர் அவர்களும் உழைத்தார். வயதை கருத்தில் கொண்டு நீங்கள் கொஞ்சம் சுற்றுப் பயணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் ஆசிரியர் அவர்களே. தி.மு.க-வும் திராவிட கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள். எத்தனை காவிகள் வந்தாலும் எத்தனை மதக் கட்சிகள் வந்தாலும் திராவிட கழகத்தை வீழ்த்த முடியாது. அதற்கு சாட்சியாகதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது சமூக நீதி மாநாடு.

தந்தை பெரியார் எந்தக் கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டினாரோ அந்தக் கொள்கைக்கு சட்டரீதியான வடிவம் கொடுத்தது திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில்தான். 2004-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என பல்வேறு வாக்குறுதிகளை கருணாநிதி் கூறினார் அதில் ஒன்றுதான் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்தது. ஆனால், இன்னிக்கு நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. மத்தியிலே ஆட்சி மாற்றம் வரப் போகிறது அடுத்த பிரதமர் ராகுல்தான் இதை நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.
 

`ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்!’ - மு.க.ஸ்டாலின் சூளுரை

கார்ப்பரேட், கம்யூனல், கரப்ஷன் இந்த மூன்றையும் வைத்துதான் மோடி அரசு செயல்படுகிறது. மத்தியில் இருக்கக்கூடிய மோடி ஆட்சி சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கக் கூடிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூகநீதியை மறுக்கக் கூடிய வகையில் மறைமுகமாக பல்வேறு பணிகளையும் செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.  ஆனால், ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பொருளாதார அளவுகோலை தற்பொழுது மோடி அரசு கொண்டு வந்துள்ளது. சமூக வாரியாக இல்லாமல் பொருளாதார ரீதியாக  பின்னடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது சமூகநீதியை காலில் போட்டு மிதிப்பதாகும்.

தற்பொழுது விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்குவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு பண மதிப்பிழப்பு நவடிக்கை என்கிற பெயரில் ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தவர் மோடி. நம் பணத்தை திருடி நமக்கே கொடுக்கிறார். விவசாயிகள் இத்தனை ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர் டெல்லியில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்கள் அவர்கள் கோரிக்கையே மோடி நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்பதுதான். ஆனால், அவர் கடைசி வரை சந்திக்கவே இல்லை. அழைத்துப் பேசவில்லை ஆனால், தற்பொழுது இந்தத் தொகை வழங்குவது தேர்தலுக்காகவும் ஒட்டுக்காகவும் தான்” என்றார்.