Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ழப்போராட்டம், தமிழக இலக்கியத்திலும் அரசியலிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. போர்ச்சூழலிலேயே வாழ்ந்த, போரின் காரணமாகத் தங்கள் வாழ்வு குலைக்கப்பட்ட, மரணத்தின் நிழலில் அவதியுற்ற, உறவுகளை இழந்த, அகதியாய்ப் புலம்பெயர்ந்த, ஈழத்தமிழர் வாழ்க்கையை தமிழகத் தமிழர்கள் உணர்வது கடினம். ஆனால், தொப்புள்கொடி உறவுகள் என்ற நெருக்கத்தாலும் மொழியுணர்வு, இனவுணர்வுக் கருத்தியலாலும் ஈழத்தமிழர்களின் வலிகளைத் தங்கள் வலிகளாய் அறிந்தவர்கள் தமிழகத் தமிழர்கள்.

தலையங்கம்



இலங்கையில் இறுதியுத்தம் நடந்து முடிந்து பத்தாண்டுகள் ஆகின்றன. இனக்கலவரம் தொடங்கிய ‘ஜூலை’, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் ‘நவம்பர்’ என்பதைப்போல் ‘மே’ மாதமும் ஈழத்தமிழர் வாழ்வில் அழிவின் சுவடுகளோடு இடம்பிடித்துள்ளது. ஈழத்தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக முதலில் அறவழிப்போராட்டம், பிறகு ஆயுதப்போராட்டம் என்று தொடங்கிய கால்நூற்றாண்டைக் கடந்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ‘எங்கள் துவக்குகளை மௌனிக்கிறோம்’ என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்து, பத்தாண்டுகள் கடக்கின்றன.

போர்ச்சூழல் எத்தனையோ அழிவுகளை ஏற்படுத்தியபோதும், தமிழ் இலக்கியத்துக்குக் கொடைகளையும் வழங்கியது. உலக இலக்கியங்களுக்குச் சற்றும் குறையாத படைப்புகளைத் தரும் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் உருவாகி எழுந்தனர். போர்ச்சூழலின் அனுபவத்தில் வீரியமிக்க படைப்புகள் வெளிவந்தன. 2009 இலங்கை இறுதியுத்தம் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத் தமிழர்கள் கையறுநிலையில் தவித்தனர். பொதுமக்களுடன் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு வீதியில் இறங்கிப் போராடினர். எல்லா முயற்சிகளுக்கும் அப்பால் அந்தத் துயரம், மானுடத்தின் மிகப்பெரும் அழிவு நடந்துமுடிந்தது.

வரலாறு என்பது கடந்தகாலப் பதிவுகள் மட்டுமல்ல. அது நிகழ்காலத்துக்கான வெளிச்சத்தின் சிறு கீற்றையும் தன் இடுக்கில் ஒளித்துவைத்திருக்கும். கடந்தகாலச் சுவடுகளைப் பின்தொடர்வதன் மூலம் எதிர்காலத்துக்கான தடயத்தையும் கண்டுகொள்ளலாம். அதற்கான ஒரு முயற்சியே இந்தச் சிறப்பிதழ்.

நாம் நேசித்த, நாம் உடன் நின்ற, நாம் குரல் எழுப்பிய, நாம் வலியுணர்ந்த நம் ஈழத்தமிழ் மக்களுக்கு இந்த இதழைச் சமர்ப்பிக்கிறோம்.

- ஆசிரியர்  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!