Published:Updated:

இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை

காரைக்கால்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை விடுவிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசை வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமாக இந்தியா வலியுறுத்தி வருவதாக மத்திய அரசு தப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

##~~##
இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் 26 பேரையும் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் அவர்களை இன்று விடுதலை செய்தது.இதனையடுத்து அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புகின்றனர்.