Published:Updated:

`2014-ல் சொன்னேன்; இப்போது நிறைவேற்றிவிட்டேன்’ - ராஜஸ்தானில் மோடி பெருமிதம்

`2014-ல் சொன்னேன்; இப்போது நிறைவேற்றிவிட்டேன்’ - ராஜஸ்தானில் மோடி பெருமிதம்
`2014-ல் சொன்னேன்; இப்போது நிறைவேற்றிவிட்டேன்’ - ராஜஸ்தானில் மோடி பெருமிதம்

தீவிரவாதிகள் கும்பல் மீது தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

தீவிரவாதிகள் மீதான விமானப்படை தாக்குதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ளது. இதை அடுத்து தற்போது பிரதமர் மோடி ராஜஸ்தான் சென்றுள்ளார். ராஜஸ்தானின் சுரு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையில் பேசினார். விமானப்படையின் பதிலடிக்குப் பிறகு பிரதமர் பேசியதால் இந்தக் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கூட்டத்தில் பேசிய அவர், ``கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவைப் பாதுகாப்பாக மாற்றுவேன் என உறுதி அளித்தேன். அதை இப்போது நிறைவேற்றியுள்ளேன். இந்த மண்ணில் நான் உறுதியளிக்கிறேன். யாரிடமும் எப்போதும் இந்தியாவை அடிபணிய விடமாட்டேன். எதற்காகவும், யாருக்காகவும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன். நாட்டைவிட முக்கியமானது எதுவும் இல்லை. 

அதேநேரம் நாட்டுக்கு எதிராகச் செயல்படும் எந்தச் செயலைப் பார்த்துக்கொண்டிருக்கவும் மாட்டோம். தேசத்தைப் பாதிக்கும் எந்த விஷயத்தையும் அனுமதிக்க மாட்டேன். நம் அனைவரின் பாதுகாப்புக்கும் ராணுவத்தினரே காரணம். நாடு பாதுகாப்புக்காக உள்ளது. இதை நாட்டு மக்களிடம் உறுதியாகக் கூறுகிறேன். தீவிரவாத முகாம்களை அழித்த விமானப் படை வீரர்களுக்குத் தலைவணங்குகிறேன். இந்தியா பாதுகாப்பான கைகளில் உள்ளது. நான் இந்த அளவுக்கு வேலை செய்வதற்கு காரணம் நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான். தனிப்பட்ட நபரைவிட ஒரு குழு பெரியது. ஆனால், நாட்டைவிட எந்தக் குழுவும் பெரியது கிடையாது. இப்போது நாட்டு மக்கள் உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பதைக் காண முடிகிறது" என்றார். 

இதே கூட்டத்தில் பேசும்போது, ``அடுத்த 10 ஆண்டுகளுக்குள் விவசாயிகளின் அக்கவுண்ட்களில் 7.5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்படும். இதற்காக அவர்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. நேரடியாக அவர்கள் அக்கவுண்ட்டுக்கு பணம் செலுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு மொபைலில் தகவல் வரும்’’ என்றார்.