Published:Updated:

``தி.மு.க-வுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருக்கிறது!"- வைகோ

``தி.மு.க-வுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருக்கிறது!"- வைகோ
``தி.மு.க-வுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருக்கிறது!"- வைகோ

``தி.மு.க-வுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறது. நான் திருச்சியில் போட்டியிடுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை" என்று கோவையில் வைகோ தெரிவித்துள்ளார்

``இந்தியாவை மீட்போம்… தமிழகத்தை காப்போம்" என்கிற முழக்கத்தை முன் வைத்து கோவையில் இன்று அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்த உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக கோவை வந்துள்ள வைகோ, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், ``ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட சமூக ஆர்வலர் முகிலன் புகைபடங்கள் உட்பட  இன்னும் சில ஆவணங்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவர் காணாமல் போய் 12 நாள்களுக்கு மேலாகி விட்டது. முகிலன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம் அல்லது போலீஸார்தான் அதற்கு காரணமாக இருக்க முடியும்.

முகிலன் மகன் மற்றும் சமூக ஆர்வலர் ஹென்றிடிபேன் உள்ளிட்டோர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் நடக்காத மர்மம் முகிலன் விவகாரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முகிலன் விவகாரத்தில் தமிழக அரசின் போக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முகிலனுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

வரும் 1-ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும் போது கறுப்புக் கொடி காட்டப்படும். முல்லை பெரியாரில் புதிய அணைய கட்ட ஆய்வறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்தது, நீட் விவகாரம், 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரம், ஹைட்ரோ கார்பன் பிரச்னை, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வராதது, உயர் மின் கோபுர விவகாரம், நியூட்ரினோ திட்டம், சம்ஸ்கிருதம் திணிப்பு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டப்படும்

தி.மு.க-வுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறது. நான் திருச்சியில் போட்டியிடுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை. இன்னும் ஆட்சிமன்றக் குழுவே கூடவில்லை. அதன்பிறகுதான் எல்லாம் முடிவாகும்" என்றார்