Published:Updated:

`இந்திய வீரர் மீட்கப்படுவார்!’ - கே.எஸ்.அழகிரி நம்பிக்கை

`இந்திய வீரர் மீட்கப்படுவார்!’ - கே.எஸ்.அழகிரி நம்பிக்கை
`இந்திய வீரர் மீட்கப்படுவார்!’ - கே.எஸ்.அழகிரி நம்பிக்கை
`இந்திய வீரர் மீட்கப்படுவார்!’ - கே.எஸ்.அழகிரி நம்பிக்கை

"பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வீர்ர்களை மீட்க  பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது  ஐ.நா மன்றம் வரை சென்று இந்திய வீரர்களை மீட்க முடியும். நிச்சயம் நம் வீரர்களை இந்தியா மீட்டு வரும் என்று கோவையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், அப்போது, ``இந்திய ராணுவம் நடத்தியுள்ள இந்த தாக்குதல் முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டும்.  காலம் தாழ்த்தி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வீரரை மீட்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது. ஐ.நா மன்றம் வரை சென்று நம் வீரரை மீட்க முடியும். இந்தியா மீட்டு வரும். இந்திய விமானப்படை செய்தது சாகசம். இதை ஆயிரம் முறை வரவேற்கிறேன். அதேவேளையில் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால் அது சிறந்தது. பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு எப்போதும் தாக்குதல்களை முன்னெடுத்தது கிடையாது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க தலைமையிலான கூட்டணி இருக்கிறது. புதிதாக கூட்டணிக்குள் வரக்கூடிய கட்சிகளை தி.மு.க முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் வேண்டும். யார் வேட்பாளர் என்பதை ராகுல்காந்தியிடம் தெரிவித்துள்ளோம்.
தொகுதி பங்கீடு முடிந்தபின் அவை இறுதி செய்யப்படும். தி.மு.க தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி. சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. அ.தி.மு.க மக்கள் விரோத கூட்டணி வன்முறையான கூட்டணி, ஊழல் நிறைந்த கூட்டணி. சமூக நீதியிலும் பொதுவுடமையிலும்  நம்பிக்கை உள்ளவர்கள் தி.மு.க தலைமையில் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.  பிரசாரத்திற்காக
ராகுல் காந்தி கண்டிப்பாக தமிழகத்திற்கு  வருவார். 

7 தமிழர் விடுதலை பொறுத்தவரை குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டும் தவறு செய்தவர்களை தவறு செய்தவர்களாக பார்க்க வேண்டும். கொலை செய்தவர்களுக்கு தமிழர்கள் என்ற அடைமொழி கொடுப்பது சரியானது அல்ல. இந்த விவகாரத்தில் நீதிமன்றம்தான் அவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.