Published:Updated:

``அம்மா அ.தி.மு.க இப்போது அடியாள் அ.தி.மு.க ஆகிவிட்டது!” - கோவையில் கொந்தளித்த ஸ்டாலின்

``அம்மா அ.தி.மு.க இப்போது அடியாள் அ.தி.மு.க ஆகிவிட்டது!” - கோவையில் கொந்தளித்த ஸ்டாலின்
``அம்மா அ.தி.மு.க இப்போது அடியாள் அ.தி.மு.க ஆகிவிட்டது!” - கோவையில் கொந்தளித்த ஸ்டாலின்
``அம்மா அ.தி.மு.க இப்போது அடியாள் அ.தி.மு.க ஆகிவிட்டது!” - கோவையில் கொந்தளித்த ஸ்டாலின்

``இந்தியாவை மீட்போம்! தமிழகத்தைக் காப்போம்!" என்கிற முழக்கதை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று கோவையில் அரசியல் எழுச்சி மாநாடு நடத்தியது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டு முழங்கினார்கள்.

முதலில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ``இந்திய ராணுவத்திற்கு இரண்டு குணங்கள் உண்டு. ஒன்று பெருந்தன்மை, இன்னொன்று வீரம். இந்திய விமானப் படை வீரர்களுக்கு  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்டாலின், சிற்பியைப் போல கவனம் எடுத்து கொள்கைரீதியான கூட்டணியை உருவாக்கியுள்ளார். இது பேரம் பேசும் கூட்டணி கிடையாது. ஆட்சியைப் பிடிப்பது இந்தக் கூட்டணியின் நோக்கம் இல்லை. அதைவிட மேலாக, இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உருவான கூட்டணி இது. 

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழக விவசாயக் கடன்களை ஸ்டாலின் ரத்து செய்வார். இந்தியப் பொருளாதாரத்தை மோடி நாசம் செய்துவிட்டார். சமூக நீதி பேசும் பாட்டாளி மக்கள் கட்சி, இந்த மேடையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், வேறு ஏதோ காரணத்திற்காக பா.ம.க , பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறது. பொதுவுடமைக் கட்சிகள் இருக்கும் இடத்தில் பா.ம.க இருந்திருக்க வேண்டும். கொள்கைக்கு மாறான ஒரு கட்சி என்றால் அது பா.ம.க தான்” என்றார்.

அடுத்தாகப் பேசிய சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , ``44 ராணுவ வீரர்கள் பலியானதற்கு யார் பொறுப்பேற்பது என்று  எண்ணாமல், பதிலடி கொடுத்தற்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்  மோடியின் ஆட்சியில் இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் எப்போதும் தாமரை மலராது. இந்தியா முழுக்க தாமரை கருகிக்கொண்டிருக்கும்போது தமிழகத்தில் எப்படி  தாமரை மலரும்' என்றார்.

``அம்மா அ.தி.மு.க இப்போது அடியாள் அ.தி.மு.க ஆகிவிட்டது!” - கோவையில் கொந்தளித்த ஸ்டாலின்

 தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கலைஞர் ஆட்சி சாட்சி. ஒரு ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மத்தியில் இருக்கக்கூடிய மோடி ஆட்சியும் மாநிலத்தில் எடப்பாடி ஆட்சியும்தான் உதாரணம். இந்த ஆட்சி தொடர்ந்தால், நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி திறப்பார்கள். இந்த ஆட்சி தொடர்ந்தால் அனிதாக்கள் இறந்துகொண்டே இருப்பார்கள். 

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை ஜெயலலிதா கைப்பற்றினார். ஜெயலலிதாவை கைக்குள் வைத்துக்கொண்டு ஊழல் செய்தது சசிகலா குடும்பம். இப்போது அந்தக் கட்சியை எடப்பாடி கைப்பற்றியிருக்கிறார். ஆகவே, இது எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க இல்லை. ஜெயலலிதா கைப்பற்றிய அம்மா அ.தி.மு.க. இப்போது அடியாள் அ.தி.மு.க ஆகிவிட்டது.  இவர்கள் கொலையும் செய்வார்கள். அதுதான் கொடநாட்டில் நடந்தது" என்றார்.