Published:Updated:

`மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் அழிந்துவிடும்!' - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

`மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் அழிந்துவிடும்!' - அமைச்சர்  ராஜேந்திரபாலாஜி
`மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் அழிந்துவிடும்!' - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் விருதுநகரில் இன்று சுகாதார திருவிழா நடைபெற்றது. அப்போது கர்ப்பிணிப் பெண்கள் 70 பேருக்கு அரசு சார்பில் வளைகாப்பு சீர் செய்யப்பட்டது. இந்த விழாவில் தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், ``பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் துன்புறுத்தப்பட்டால் அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். அபிநந்தன் தைரியமாக உள்ளார். ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டால் அந்த நாடு பல பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து அவர்களை வளர்த்து வருகிறது.

மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். சீனாவாக இருந்தாலும் சரி, மைனாவாக இருந்தாலும் சரி இந்திய அரசை எதிர்க்கும் எந்த நாடாக இருந்தாலும், அரசாக இருந்தாலும் சரி. அவற்றை எதிர்க்க மோடி அரசுடன் தமிழக அரசு துணை நிற்கும். தற்போது இந்தியா இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவை மோடியும், தமிழ்நாட்டை எடப்பாடியும் ஆள வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.