Election bannerElection banner
Published:Updated:

`எல்லையைத் தாண்டியும் நம் வீரர்கள் துணிச்சலாகச் செயல்படுகின்றனர்’- பிரதமர் மோடி பெருமிதம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாட்டில் உள்ள பா.ஜ.க தொண்டர்களுடன் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் பேசி வருகிறார். அந்த வகையில் இன்று ஒரே நேரத்தில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுமார் ஒரு கோடி பா.ஜ.க தொண்டர்களுடன் வீடியோ மூலம் உரையாற்றினார். உலகிலேயே இதுதான் மிகப் பெரிய வீடியோ கான்பிரன்ஸ் என பா.ஜ.க வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

`எல்லையைத் தாண்டியும் நம் வீரர்கள் துணிச்சலாகச் செயல்படுகின்றனர்’- பிரதமர் மோடி பெருமிதம்

அவர் பேசும் போது, ``நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடைசெய்யவே நமது எதிரிகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் நமக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். நமது நாட்டு மக்கள் அனைவரும் பாறை போல் ஒன்றாக இணைந்து எதிரிகளின் தீய தாக்குதலை முறியடிக்க வேண்டும். ராணுவ வீரர்களுக்கு நாம் உறுதுணையாக நிற்கவேண்டும். என்ன நடந்தாலும் நமது முன்னேற்றமும் நமது பணியும் தடைப்பட்டு விடக் கூடாது. 

`எல்லையைத் தாண்டியும் நம் வீரர்கள் துணிச்சலாகச் செயல்படுகின்றனர்’- பிரதமர் மோடி பெருமிதம்

நமது ராணுவ வீரர்கள் எல்லையிலும் எல்லையைத் தாண்டி சென்றும் நமது நாட்டின் துணிச்சலை நிரூபித்துவிட்டனர். நமது சக்திக்கு உலகம்தான் சாட்சி. உங்கள் பணி எதுவாக இருதாலும் அதில் கொஞ்சம் சிரமப்படுங்கள், நம் நாட்டை அடுத்த உயரத்துக்கு அழைத்துச் செல்ல பாடுபடுங்கள்.  இந்தியா ஒன்றாக வாழும், இந்தியா ஒன்றாக உழைக்கும், இந்தியா ஒன்றாக வளரும், இந்தியா ஒன்றாகப் போராடும், இந்தியா ஒன்றாக இணைந்து வெற்றிபெறும். நம் வெற்றி எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் உள்ளது. நாட்டின் இளைஞர்கள் இந்தியாவை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்த நேரத்தில் நம் அனைவரும் உண்மையாக உழைத்து நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். 
 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு