Published:Updated:

``போராடிச் சோர்ந்தாலும் 7 பேர் விடுதலைக்காக மீண்டும் எழுகிறேன்” - அற்புதம்மாள் உருக்கம்

``போராடிச் சோர்ந்தாலும் 7 பேர் விடுதலைக்காக மீண்டும் எழுகிறேன்” - அற்புதம்மாள் உருக்கம்
``போராடிச் சோர்ந்தாலும் 7 பேர் விடுதலைக்காக மீண்டும் எழுகிறேன்” - அற்புதம்மாள் உருக்கம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கைதாகி, 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக தமிழகத்தில் ஒலித்துவருகிறது.

``போராடிச் சோர்ந்தாலும் 7 பேர் விடுதலைக்காக மீண்டும் எழுகிறேன்” - அற்புதம்மாள் உருக்கம்

இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்து முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தீர்ப்பு அறிவித்த அடுத்த இரண்டு தினங்களில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடி, எழுவர் விடுதலை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ,அந்தக் கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதுவரை 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

எழுவர் விடுதலையில், ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்துவந்தனர். இருந்தும் தற்போது வரை ஆளுநர் தரப்பில் இருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று, எழுவர் விடுதலைக்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார் அற்புதம்மாள். இதன் அடுத்தகட்டமாக, வரும் 9-ம் தேதி, தமிழகத்தின் ஏழு நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த உள்ளார்.

``போராடிச் சோர்ந்தாலும் 7 பேர் விடுதலைக்காக மீண்டும் எழுகிறேன்” - அற்புதம்மாள் உருக்கம்

இதுதொடர்பாக அற்புதம்மாள் பேசும்போது, ‘  28 ஆண்டுகளாக நான் போராடிப் போராடி சோர்ந்துபோனாலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக மீண்டும் எழுகிறேன். தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வாக்குமூலம் வாங்கிய அதிகாரி, அமைச்சரவைக் கூட்டம் என அனைத்தும் நிறைவேறிய பின்னரும், ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்தில் நிற்கிறது இந்த 7 பேரின் விடுதலை. காத்திருந்து பயனில்லை என்பதால், 22 மாவட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்ட பின்னர், அடுத்தகட்டமாக வரும் 9-ம் தேதி 7 பேரை நினைவூட்டும் வகையில், தமிழகத்தின் ஏழு நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர், ஊடகங்கள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.