``ஜெயலலிதாவின் ஆன்மா ஆட்சியைப் பாதுகாக்கிறது!" -முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு | Formar Minister vaithilingam speech

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (01/03/2019)

கடைசி தொடர்பு:14:50 (01/03/2019)

``ஜெயலலிதாவின் ஆன்மா ஆட்சியைப் பாதுகாக்கிறது!" -முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு

``தினகரன் குக்கர் சின்னத்தில்  மட்டுமல்ல, வேறு எந்த சின்னத்தில் தேர்தலில் நின்றாலும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பார்" என தஞ்சாவூரில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

கூட்டம்

அ.தி.மு.க சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் நடைபெற்றது. இதில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்.பி பரசுராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய வைத்திலிங்கம், ”ஜெயலலிதாவின் ஆன்மாதான் ஆட்சியைப் பாதுகாத்துக்கொண்டுள்ளது. இரட்டை இலை எங்களுக்குதான் என நீதிமன்றம் கூறியுள்ளது. இரட்டைஇலை சின்னம் எங்களிடம் உள்ள வரை கட்சியையும் ஆட்சியையும் ஒன்றும் செய்துவிட முடியாது.

வைத்திலிங்கம்

இந்தக் கட்சியும்,ஆட்சியும் இன்று போய்விடும், நாளை போய்விடும் என்று கூறினார்கள். ஆயிரம் ஸ்டாலின் ஆயிரம் தினகரன் வந்தாலும் கட்சியையும் ஆட்சியையும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதற்காக, இன்று நீதியின் தீர்ப்பு வந்துள்ளது.கட்சியின் கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. இது புரியாமல், அரசியல் தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். இவர், தி.மு.க தலைவராக இருக்க தகுதியானவரா என்றும் கேள்வி எழுப்பினார். 

பின்னர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம், ``இரட்டை இலை எங்கு இருக்கிறதோ, அங்குதான் ஆட்சியும் கட்சியும் இருக்கும்.தோல்வி அடைந்தவர்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் பேசுவார்கள். டி.டி.வி. தினகரன், குக்கர் சின்னம் மட்டுமல்ல வேறு எந்த சின்னத்தில் நின்றாலும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பார்” என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close