Published:Updated:

`நரசிம்ம அவதாரம் எடுத்து தீவிரவாதிகளை அழித்துள்ளார்' - மோடியைப் புகழ்ந்த ஓ.பி.எஸ்!

`நரசிம்ம அவதாரம் எடுத்து தீவிரவாதிகளை அழித்துள்ளார்' - மோடியைப் புகழ்ந்த ஓ.பி.எஸ்!
`நரசிம்ம அவதாரம் எடுத்து தீவிரவாதிகளை அழித்துள்ளார்' - மோடியைப் புகழ்ந்த ஓ.பி.எஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சி தொடங்கியது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழா நடந்து வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் மதியம் 2.26 மணிக்கு மேடைக்கு வந்தனர். முதலாவதாக மதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான பணி முடிக்கப்பட்ட சாலை மற்றும் பணக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான பணி முடிக்கப்பட்ட சாலைகளை திறந்துவைத்தார் மோடி. மேலும், குமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களைத் திறந்து வைத்தார். மேலும், மதுரை முதல் செட்டிக்குளம் வரையும், செட்டிக்குளம் முதல் நத்தம் வரையிலான சாலை மற்றும் கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா மற்றும் போக்குவரத்து மியூசியம் உள்ளிட்ட திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டினார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றுப் பேசுகையில், ``மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பணிகளை மக்களுக்கு அர்ப்பணிக்கவும், தமிழகத்தின் பிற்பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகளை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சி. ஏழைகள் விவசாயிகளுக்கு எந்த ஒரு காலகட்டத்திலும் நடக்காத திட்டங்களை வாரி வழங்கியுள்ள பிரதமருக்கு வணக்கங்கள். தமிழகம், தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான திட்டங்களை தந்திருக்கிறார் அதற்காகப் பிரதமருக்கு நன்றி. சுதந்திரம் பெற்ற காலம் முதல் இதுவரை இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் திட்டங்கள் தந்ததில்லை. குமரி மாவட்டத்தில் 40,000 கோடி ரூபாய்க்குத் திட்டங்களைத் தந்த பிரதமருக்கு நாம் உயிர் உள்ளவரை நன்றியுடன் இருப்போம்" என்றார்.

துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில், ``நமது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்குப் பெரும் பயன்தரக்கூடிய திட்டங்களை வழங்க வந்திருக்கிறார். நாம் விரைவில் பெற இருக்கும் இமாலய வெற்றியின் தொடக்கம் இது. அண்டைநாடுகளின் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் நரசிம்ம அவதாரம் எடுத்தது போன்று நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை அழித்தார். நம் நாட்டை எதிர்க்கத் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு அச்சுறுத்தல் இது. எதிர்க்கட்சிகள் பாராட்டும் அளவுக்குச் செயல்பட்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். துணிச்சலான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும் பிரதமர் நாட்டுமக்கள் நலனுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இன்று புதிய பல திட்டங்களைக் கொண்டுவரும் மோடிக்குத் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவந்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம். கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு மருத்துவ வசதிசெய்யும் ஆயுஸ்மான் காப்பீடுத் திட்டம் கொண்டு வந்துள்ளார். அதுபோல ஜெயலலிதா முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்டம் கொண்டுவந்தார். ஜெயலலிதா மற்றும் மோடியின் எண்ணங்கள் ஒன்றுபோல இருக்கின்றன" என்றார்.