மோடி கொடுத்த சிக்னல்; ”தே.மு.தி.க-விற்கு 5 ப்ளஸ் 1" - விரைவில் வெளியாகிறது அறிவிப்பு | DMDK in ADMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (02/03/2019)

கடைசி தொடர்பு:12:08 (02/03/2019)

மோடி கொடுத்த சிக்னல்; ”தே.மு.தி.க-விற்கு 5 ப்ளஸ் 1" - விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

 

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைவது உறுதியாகவிட்டது. இன்று, அதுகுறித்த அறிவிப்பு இரண்டு கட்சிகளின் சார்பிலும் வெளியாக உள்ளதாக அ.தி.மு.க வட்டாரத்தில்  தகவல் வெளியாகியுள்ளது. 

பி.ஜே.பி டெல்லி மேலிடம், தே.மு.தி.க-வை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க தலைவர்களிடம் வலியுறுத்திவந்தது. மறுபுறம், தி.மு.க தரப்பிலும் தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. ஆனால், தி.மு.க தரப்பில் அதிகபட்டசமாக நான்கு சீட்களுக்கு மேல் தரமுடியாது என்று சொல்லப்பட்டது. இதனால், மீண்டும் அ.தி.மு.க தரப்புடன் பேச்சுவார்த்தையைத் துவக்கியது. இந்த முறை அ.தி.மு.க தரப்பு, எப்படியும் தே.மு.தி.க-வை கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடும் உறுதியில் இருந்தது. ஆறு சீட் வேண்டும் என தே.மு.தி.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஐந்து சீட் வழங்க அ.தி.மு.க ஒப்புக்கொண்டது. அதோடு,  அவர்களது முக்கிய கோரிக்கையான ராஜ்யசபா சீட்டுக்கு  ஓகே சொல்ல வேண்டும் என்று தே.மு.தி.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கும் அ.தி.மு.க தரப்பு நேற்று ஒப்புதல் அளித்துவிட்டது. ஐந்து லோக்சபா சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்க முடிவாகிவிட்டது. இந்தத் தகவல், நேற்று பிரதமர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தபோது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று, இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பு, இன்னும் சற்று நேரத்தில் கிரௌன் ப்ளாஸா ஹோட்டலில் அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தே.மு.தி.க-விற்கு தேர்தல் செலவு பொறுப்பையும் அ.தி.மு.க ஏற்றுக்கொண்டுள்ளது. 
 


[X] Close

[X] Close