நாளை வி.சி.க... 4-ம் தேதி த.மா.கா..... - முடிவுக்கு வரும் கூட்டணி கணக்குகள்! | dmk and admk alliance will end on march 4

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (02/03/2019)

கடைசி தொடர்பு:19:15 (02/03/2019)

நாளை வி.சி.க... 4-ம் தேதி த.மா.கா..... - முடிவுக்கு வரும் கூட்டணி கணக்குகள்!

கூட்டணி

 

தி.மு. க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி, பா.ம.க, மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துவிட்டன. விரைவில் தே.மு.தி.க ஐந்து தொகுதிகள் என்ற கணக்கில் இணைய உள்ளது. இந்த கூட்டணியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க கூட்டணியில் விரைவில் இணைய உள்ளது. அந்தக் கட்சிக்கு ஒரு மக்களவையும், ஒரு மாநிலங்களவையும் கொடுக்க உள்ளார்கள். வரும் 4-ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு நடைபெற உள்ளது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகள் தொகுதி உடன்படிக்கையை முடித்துவிட்டது. 

விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கெனவே தி.மு.க தரப்பிடம் தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதி விவரங்களை அளித்துள்ளது. இந்த நிலையில், நாளை அண்ணா அறிவாலயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தி.மு.க தரப்பு தொகுதி உடன்படிக்கையை இறுதி செய்ய உள்ளது. இந்தக் கட்சிக்கு சிதம்பரம் தொகுதியோடு மேலும் ஒரு தொகுதி வழங்கப்பட உள்ளது. அதே போல் ம.தி.மு.க-வுக்கு இரண்டு தொகுதிகள் வழங்கப்பட உள்ளது. ஆறாம் தேதிக்கு முன்பாக அ.தி.மு.க கூட்டணி இறுதி வடிவம் பெற்றுவிடும் என்பதால், அந்த நேரத்துக்குள் தி.மு.க வும் தனது கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இரண்டு அணிகளும் நான்காம் தேதிக்குள் தங்களது கூட்டணியை இறுதி செய்ய உள்ளார்கள். 


[X] Close

[X] Close