`மோடியின் 6-ம் தேதி விசிட்' - அடுத்த நாளே காத்திருக்கும் அதிரடி! | Election date will be announce after modi's tamilnadu visit

வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (02/03/2019)

கடைசி தொடர்பு:10:43 (16/03/2019)

`மோடியின் 6-ம் தேதி விசிட்' - அடுத்த நாளே காத்திருக்கும் அதிரடி!

மோடி

மார்ச் 6-ம் தேதி தாம்பரம் அருகே பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் முடிந்த அடுத்த 24 மணிநேரத்தில் அதிரடி திருப்பம் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள் டெல்லி பி.ஜே.பி மேலிடத்தினர். 

பிரதமர் மோடி ஏற்கெனவே மார்ச் 9-ம் தேதி அன்று தமிழகம் வருகை தர இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், திடீர் என அந்தத் தேதி மார்ச் -1 என மாற்றம் செய்யப்பட்டது. அதற்குப் பின் மார்ச் 6-ம் தேதி தாம்பரத்தில் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொள்ள இருப்பதாக பி.ஜே.பி தரப்பும் பிரதமர் அலுவலகமும் உறுதி செய்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பி.ஜே.பி டெல்லி மேலிடம் கட்டளையிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிராசார கூட்டமாகவே இந்தக் கூட்டத்தை நடத்த பி.ஜே.பி தரப்பு திட்டமிடுகிறது.

பிரதமர் தமிழகத்துக்கு சில நாள்களில் அடுத்தடுத்து அவசர விசிட் செய்வதன் நோக்கம் என்ன என்று டெல்லியில் உள்ள பி.ஜே.பி தலைவர்களிடம் கேட்டோம். ``எல்லாம் தேர்தல் அறிவிப்பு காரணமாகவே. ஒன்பதாம் தேதி கூட்டத்தை ஒன்றாம் தேதிக்கு மாற்றியதே தேர்தல் தேதி அறிவிப்பு வந்துவிடும் என்பதாலே. இப்போது, சென்னை பொதுக்கூட்டம் ஆறாம் தேதி வைத்ததற்குக் காரணமும் அதுதான். தமிழகத்துக்கு மோடி வந்து சென்ற அடுத்த இருபத்து நான்கு மணிநேரம் கழித்து இந்தியாவுக்கான பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு வர உள்ளது. அதாவது மார்ச் 8-ம் தேதி மதியம் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளது. அதற்காகவே இந்த அவசர பயணத் திட்டம்” என்கிறார்கள்.


[X] Close

[X] Close