Published:Updated:

``விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன்!” - மது குடிப்போர் சங்க மாநிலத் தலைவர் அறிவிப்பு

``விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன்!” - மது குடிப்போர் சங்க மாநிலத் தலைவர் அறிவிப்பு
``விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன்!” - மது குடிப்போர் சங்க மாநிலத் தலைவர் அறிவிப்பு

``மது இல்லாமல் கூட்டத்தை எவராலும் கூட்டமுடியாது. தமிழகம் முழுவதும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவது உறுதி’’ என்று மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மீண்டும் அறிவித்திருக்கிறது. 

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணியில் சேரும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்தது, ‘ட்ரெண்ட்டிங்’ ஆனது. விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், மது குடிப்போர் சங்கம் தொடர்ந்து, தங்களின் கருத்துகளை தெரிவித்துவருகிறது. ``கொள்கையில்லா கூட்டணியை எந்தக் கட்சிகள் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால், குவார்ட்டர் இல்லாத கூட்டத்தை எந்தக் கொம்பனாலும் கூட்ட முடியாது. தமிழ்நாட்டில், இப்படை தோற்கின் எப்படை வெல்லும். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்’’ என்று மது குடிப்போர் சங்க மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் தெரிவித்திருக்கிறார். 

இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் செம வைரலாக மாறியிருக்கிறது. ``இவங்க தெரிஞ்சு பண்றாங்களா இல்லை தெரியாமலேயே பண்றாங்களா. ஓவர் அலப்பறையா இருக்கு. இவங்க மனசுக்குள்ள அரசியல்வாதிகள் என்று யாரோ ஆழமாகப் பதிய வைச்சிருக்காங்க... அ.தி.மு.க, தி.மு.க-வை விட மெகா கூட்டணியாக இருப்பாங்கப் போல...’’ என்று கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு, மது குடிப்போர் சங்கத்தைக் கதறவிடுகிறார்கள், நெட்டிசன்கள்.