‘அம்மாவின் சாவில் மர்மம் இருக்கிறது... அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்று ‘தர்மயுத்தம்’ புகழ் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய ‘போர்க்குரலுக்கு’ செவிசாய்த்து எடப்பாடி பழனிசாமி அரசால் அமைக்கப்பட்டது, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். பல பரபரப்புகளைக் கிளப்பிவந்த இந்த ஆணையத்துக்கு இடைக்காலத் தடைவிதித்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகப் பலரையும் நேரில் வரவழைத்து விசாரித்ததன் மூலம், ஆறுமுகசாமி ஆணையம் பல மாதங்களாக ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்திகளைத் தந்துகொண்டிருந்தது. இந்த ஆணையத்தின் செயல்பாடுகளும் சர்ச்சைக்குரிய செய்திகளாக மாறின. இந்நிலையில், கருணாநிதிமீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா கமிஷன், குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி நானாவதி கமிஷன் தொடங்கி தூத்துக்குடித் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம்வரை, மத்திய, மாநில அரசுகளால் இதற்குமுன் அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விசாரணை ஆணையங்களால் என்ன பலன் கிடைத்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.

கருணாநிதி ஆட்சியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஜெயலலிதா குற்றம்சாட்டினார். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், அதுகுறித்து விசாரிக்க நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் அமைத்ததால் பல கோடி ரூபாய் செலவானதே ஒழிய, வேறு எந்தப் பலனும் இல்லை என்கிற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், ரகுபதி ஆணையம் தொடர்பான ஒரு வழக்கை, கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, “ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவுசெய்யாமல், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பியதுடன், ‘‘அரசால் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள் வீணானவை’’ என்று கூறியது உயர் நீதிமன்றம்.

மேலும், ‘`எதன் அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது? இதுவரை எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? அந்த ஆணையங்கள் என்ன செய்கின்றன? ஆணையம் அமைத்து அரசு என்ன சாதனை செய்துள்ளது?” என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்றம், “விசாரணை ஆணைய அறிக்கையால் எந்தப் பயனும் இல்லை. விசாரணை ஆணையம்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்” என்றும் சீறியது.

ஆறுமுகசாமி ஆணையம் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி
கே.சந்துருவிடம் பேசியபோது, “ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தனது விசாரணைக்கு அப்பாற்பட்ட உண்மைகளைத் தேட முற்பட்டதுதான் இடைக்காலத் தடைக்கான காரணம். நீதிபதிகளுக்குச் சாதாரணமாக சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களில் அனுபவம் கிடைத்திருக்கலாம். ஆனால், மருத்துவம் தொடர்பான துறைகளில் அவர்களின் அனுபவம் மிகவும் சொற்பமே. நுட்பமான மருத்துவ சிகிச்சைகளைப் பற்றிய ஆய்வு என்பது அவர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டது. மருத்துவ நிபுணர்களின் கருத்தை நீதிமன்றங்கள் எளிதில் புறக்கணிக்க முடியாது. கவனக்குறைவான அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்கள்மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்வதற்குக்கூட நிபுணர்களின் ஒப்புதல் தேவை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தச்சூழ்நிலையில், சகட்டுமேனிக்கு ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களைக் கேள்விகளுக்கு உட்படுத்தியதும், எம்.ஜி.ஆர் மரணம் குறித்த ஆவணங்களைத் தேட முற்பட்டதும்தான் தடையுத்தரவுக்கு வழிவகுத்துவிட்டது” என்றார்.

மேலும், விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படும் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார், நீதிபதி கே.சந்துரு.

“பெரும்பாலும், அரசியல்ரீதியாக தங்களின் எதிரிகளை அசிங்கப்படுத்து வதற்கும், தங்கள் கட்சியில் உள்ள பெரிய மனிதர்களைச் சிக்கலிலிருந்து விடுவிப்பதற்கும்தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. விசாரணை ஆணையத்தின் அறிக்கை களுக்கு காவல்நிலையத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைக்கு உண்டான சட்டமதிப்புகூடக் கிடையாது. விசாரணை ஆணையங்களின் பரிந்துரை களை அரசு ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. அவை அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்வரை பரிந்துரை களாக மட்டுமே இருக்கும். நெருக்கடி காலத்தில் அரசியல் கைதிகளை, குறிப்பாக தி.மு.க கைதிகளைத் துன்புறுத்தியதைப் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி இஸ்மாயில் ஆணையம், சிறை அதிகாரிகளைக் குற்றம் கூறியது. அதன் பின்னரும் அந்த அதிகாரிகளுக்குப் பதவியுயர்வு கொடுத்து மகிழ்ந்தது அன்றைய எம்.ஜி.ஆர் அரசு.

விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் ஆளுங்கட்சிக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கினால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். விசாரணை ஆணையம் அமைத்த காரணம் தங்களுக்கு அரசியல்ரீதியாக சாதகம் விளைவிக்குமென்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எது எப்படியிருப்பினும் கிரிமினல் வழக்குகளில் விசாரணை ஆணையம் அமைப்பது பொருத்தமான செயல் அல்ல. உடனடியாக காவல்துறை குற்றங்களைத் துப்புதுலக்குவதைத் தவிர்க்கும்விதமாகத்தான் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமையும். இப்படித்தான், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் தாமிரபரணியில் அமிழ்த்திக் கொல்லப்பட்டபோது, நீதிபதி மோகன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் தேவையில்லை, சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இன்றுவரை மாஞ்சோலைத் தொழிலாளர்களின் கொலை துப்புதுலக்கப்படவில்லை. தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு விசாரணை அறிக்கை வெளிவரவில்லை. எனவேதான், விசாரணை ஆணையங்களை மக்கள் நம்புவதில்லை.

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் விசாரணை ஆணையத்திற்கு நீதிபதி மோகனை நியமித்தபோது, அவரை நியமிக்கக் கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது `தொடர்ச்சியாக ஒரே நீதிபதியை ஒரு அரசு விரும்பினால் அதற்கு உள்நோக்கம் இருக்கிறது, அப்படிப்பட்ட நீதிபதியினால் நடுநிலையாக அறிக்கை அளிக்க முடியாது’ என்று கூறப்பட்டதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், தலைமைச்செயலகம் குறித்த விசாரணைக்காக போடப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை அதே காரணங்களுக்காக சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தங்களுக்குத் தோதாக அறிக்கை அளிக்கும் ‘ஆஸ்தான நீதிபதிகளை’த்தான் அரசுகள் விரும்புகின்றன. என்ன செய்வது?” என்றார் கவலையுடன்.
“பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மும்பையில் 1992-ல் மதக்கலவரம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அந்தக் கலவரம் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அளித்த அறிக்கை பலராலும் வரவேற்கப்பட்டது. அந்தக் கலவரம் எப்படி ஏற்பட்டது, குற்றமிழைத்த காவல்துறை அதிகாரிகள் யார் யார் போன்ற பல முக்கிய விவரங்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தன. ஆனால், கடைசிவரை அந்த அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படியென்றால் எதற்காக அந்த ஆணையத்தை அமைக்க வேண்டும்?

முன்பெல்லாம், முக்கியத்துவம் வாய்ந்த ஏதோ ஒரு பிரச்னை எழும்போது, அது குறித்து விசாரிக்க ‘விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகளிடமிருந்து உடனடியாகக் கோரிக்கை வரும். அதிலும், ‘பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில்’ என்று அடிக்கோடு இட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது உண்டு. தாங்கள் ‘விரும்புகிற’ ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பார்களே தவிர, பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருபோதும் அரசாங்கம் விசாரணை ஆணையம் அமைக்க முன்வருவதில்லை. பென் வால்டர் என்ற சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் (2002), பதவியில் இருக்கும் நீதிபதிகள் விசாரணை ஆணையர்களாகப் பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்கிறார் நீதிபதி கே.சந்துரு.

`விசாரணை ஆணையங்களால் எந்தப் பயனும் இருப்பதில்லையா?’ என்ற கேள்வியை மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பேராசிரியர் அ.மார்க்ஸிடம் முன்வைத்தோம்.

“தனிநபர் ஆணையங்கள் பெரும்பாலும் அரசுக்கு சாதகமாகவே அறிக்கைகள் அளிப்பதைப் பார்த்துவருகிறோம். பரமக்குடித் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் ஆணையம், ‘பரமக்குடித் துப்பாக்கிச்சூடு முற்றிலும் சரியானது... தவிர்க்க முடியாதது... அந்த மக்களைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றது சரி’ என்று கூறியது. அத்துடன் ஒருபடி மேலேபோய், ‘சுட்டுக்கொல்லப்பட்ட மக்கள் ஒரு காட்டுமிராண்டிக் கும்பல்... அநாகரிகத்தின் எல்லையைத் தொட்டவர்கள்’ என்று கூறியது. 1995-ல் நடந்த தென்மாவட்டக் கலவரங்களை விசாரித்த நீதிபதி கோமதிநாயகம் ஆணையமும், காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டையும், ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்தியது. விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருந்துள்ளன.

அதே நேரத்தில், ஒருசில நல்ல அறிக்கைகளும் வந்துள்ளன. நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வளர்ச்சி குறித்து ஆய்வுசெய்வதற்காக மத்திய அரசின் திட்டக்குழுவால் 2006-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பந்தோபத்யாய தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில், மனித உரிமைகள் வழக்கறிஞர் கே.பாலகோபால், யூ.ஜி.சி தலைவராக இருந்த சுகதேவ் தோரட், மத்திய அரசின் உளவுத்துறைத் தலைவராக இருந்த அஜித் தோவல், உ.பி மாநில முன்னாள் டி.ஜி.பி பிரகாஷ் சிங் உள்ளிட்ட நிபுணர்கள் இடம்பெற்றனர். மேற்குவங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரம் உட்பட நக்ஸலைட் செல்வாக்குள்ள பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து ஆய்வுசெய்த அந்தக்குழு 2008-ம் ஆண்டு ஓர் அறிக்கை அளித்தது. ‘நக்ஸலைட் என்கிற பிரச்னையை அடக்குமுறை மூலமாகத் தீர்த்துவிட முடியாது. அந்தப் பகுதிகளில் அரசாங்கமே இல்லை. தாயில்லாப் பிள்ளைகளுக்கு மாற்றாந்தாயாக நக்ஸலைட்டுகள் செயல்படுகிறார்கள். ராணுவ ரீதியாக அவர்களை எதிர்கொண்டு எதையும் செய்ய முடியாது. வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் நக்ஸலைட்டுகள் இல்லை. வளர்ச்சி குறைந்த மாவட்டங்களில்தான் அவர்கள் இருக்கிறார்கள். வளர்ச்சிக்குறைவுதான் அவர்களின் இருப்புக்குக் காரணமாக இருக்கிறதே தவிர, வளர்ச்சிக்குறைவுக்கு யார் பொறுப்பு என்பதுதான் பிரச்னையைத் தீர்க்க வழி’ என்று சுட்டிக்காட்டினர். `அரசு தோற்றுப்போன இடங்களில் நக்ஸலைட்டுகள் வெற்றியடைகிறார்கள் என்பதுதான் பிரச்னை. இதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கிற வரை, பிரச்னை தீராது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. அது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கிறது” என்றார்.

ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தலைவலியை ஏற்படுத்துகிற ஒரு பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், எதிராளிகளைப் பழிவாங்குவதற்கும் என விசாரணை ஆணையத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதால்தான், அதற்கு எந்தவொரு மதிப்பும் இல்லாமல்போய்விட்டது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

- ஆ.பழனியப்பன், ஓவியம்: ஹாசிப்கான்