தி.மு.க கூட்டணியில் எந்தெந்தத் தொகுதிகளில் யார் யார்?! - பட்டியல் இதோ! | DMK to finalize seat sharing with other parties

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (04/03/2019)

கடைசி தொடர்பு:15:22 (04/03/2019)

தி.மு.க கூட்டணியில் எந்தெந்தத் தொகுதிகளில் யார் யார்?! - பட்டியல் இதோ!

தி.மு.க கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்றைக்குள் மார்க்சிஸ்ட் கட்சி அறிவாலயத்திற்கு என்ட்ரி கொடுத்துவிட்டால் கூட்டணி கணக்குகள் முடிவுக்கு வந்துவிடும். தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. அந்தக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.

தி.மு.க கூட்டணி உடன்பாடு

இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக கொங்கு ஈஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளார். முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன.

ம.தி.மு.க 3 தொகுதிகள் எதிர்பார்த்தாலும் 2 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க தரப்பில் சொல்கிறார்கள். இந்நிலையில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தொகுதிகளின் எண்ணிக்கையை மட்டும் உறுதி செய்த தி.மு.க தலைமை எந்தெந்த தொகுதிகள் என்பதை பிறகு பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லியுள்ளது. இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளது என்று தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் அளித்த பட்டியல் இது.

அண்ணா அறிவாலயம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம், ம.தி.மு.கவிற்கு திருச்சி, காஞ்சிபுரம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை, முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் நாமக்கல் தொகுதியில் ஈஸ்வரன் போட்டியிட உள்ளார். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளில் 5 தொகுதிகள் கிட்டத்தட்ட முடிவு  செய்யப்பட்டுவிட்டது. நாகர்கோவில், சிவகங்கை, தேனி, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர ஆரணி, ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட மேலும் 5 தொகுதிகள் பரிசீலனையில் உள்ளது. விழுப்புரம் மற்றும் திருச்சி தொகுதியை காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்ப்பதால் இறுதிக்கட்டத்தில் திருவள்ளூர் தொகுதியை விடுதலைச் சிறுத்தைக்கும், விழுப்புரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கும் வழங்கலாம் என்கின்றனர் தி.மு.க வினர். 


[X] Close

[X] Close