Published:Updated:

`குடிநீருக்கே திண்டாட்டமா இருக்கு’ - காலிகுடங்களுடன் தம்பிதுரையின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

`குடிநீருக்கே திண்டாட்டமா இருக்கு’ - காலிகுடங்களுடன் தம்பிதுரையின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
`குடிநீருக்கே திண்டாட்டமா இருக்கு’ - காலிகுடங்களுடன் தம்பிதுரையின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை அருகே செவல்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க வந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் காரை, காலிக்குடங்களுடன் பெண்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

`குடிநீருக்கே திண்டாட்டமா இருக்கு’ - காலிகுடங்களுடன் தம்பிதுரையின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தன் தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. எனவே, விராலிமலை தொகுதியில் கடந்த சில மாதங்களாகவே, மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில், இன்று விராலிமலை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்களைச் சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைதீர்க்கும் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, விராலிமலை ராஜாளிப்பட்டியில் இன்று காலை பயணத்தைத் தொடங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உடன் சென்றார். அங்குப் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அடுத்த ஊருக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

`குடிநீருக்கே திண்டாட்டமா இருக்கு’ - காலிகுடங்களுடன் தம்பிதுரையின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தம்பிதுரை எம்பியின் கார் செவல்பட்டி பகுதியில் சென்ற போது, அங்குக் காலிக்குடங்களுடன் காத்திருந்த அந்தப் பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். காரிலிருந்து  இறங்கி வந்த தம்பிதுரை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பேசிய பெண்கள், ``ரொம்ப வருஷமாக எங்க ஊரில் குடி தண்ணீர்ப் பிரச்னை இருக்கு. குடிநீர் அறவே கிடைக்கலை. அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கல. தினம் தினம் குடிநீருக்காகத் திண்டாடுறோம் நீங்களாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

`குடிநீருக்கே திண்டாட்டமா இருக்கு’ - காலிகுடங்களுடன் தம்பிதுரையின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

 உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிய தம்பிதுரை போர்வேல் அமைத்து குடிநீர்ப் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களிடம் கூறியதுடன், அவர்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்பு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.