Published:Updated:

கொச்சி... கராச்சி..! -அண்டை நாட்டு விவகாரத்தால் குழம்பிய பிரதமர் மோடி

கொச்சி... கராச்சி..! -அண்டை நாட்டு விவகாரத்தால் குழம்பிய பிரதமர் மோடி
கொச்சி... கராச்சி..! -அண்டை நாட்டு விவகாரத்தால் குழம்பிய பிரதமர் மோடி

'ஆயுஷ்மான் திட்டத்தின்மூலம் கராச்சி நகரிலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்' எனப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கொச்சி... கராச்சி..! -அண்டை நாட்டு விவகாரத்தால் குழம்பிய பிரதமர் மோடி

குஜராத்தில் நேற்று பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது, ஜாம் நகரில் மருத்துவமனை ஒன்றைத் திறந்துவைத்து, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் பிரதமர் மோடி. அதில், ``ரஃபேல் விமானங்கள் நம்மிடம் இருந்திருந்தால், தாக்குதல் சம்பவத்தின்போது நமது விமானங்கள் ஒன்றைக்கூட நாம் இழந்திருக்க மாட்டோம். அதேநேரம், எதிர்நாட்டு விமானங்கள் ஒன்றைக்கூட மிச்சம்வைக்காமல் வீழ்த்தியிருக்கலாம் என்று நான் கூறினேன். ஆனால், அதைச் சித்திரித்து, தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பிவருகின்றன. நமது பாதுகாப்புப் படைகள்மீது நாம் நம்பிக்கைவைக்க வேண்டும் என்பது இயற்கை. 

கொச்சி... கராச்சி..! -அண்டை நாட்டு விவகாரத்தால் குழம்பிய பிரதமர் மோடி

இருப்பினும், சிலர் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள்குறித்து கேள்வி எழுப்பிவருவது ஏன் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை’’ என்று கூறியவர், மத்திய அரசின் ஆயுஷ்மான் சுகாதார திட்டம்குறித்தும் பேசினார். அப்போது, ``மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை மூலம் கொல்கத்தா, கராச்சி என இந்தியாவின் எந்த இடத்திலும் சிகிச்சை பெறலாம்" எனப் பேசினார். கராச்சி பாகிஸ்தானில் இருக்கிறது என்பதை உணர்ந்த மோடி, சிறிது நேரத்தில் சுதாரித்துகொண்டார். பின்னர், `கொச்சிக்குப் பதில் கராச்சி' எனத் தவறுதலாகக் கூறிவிட்டதாகத் தெரிவித்த அவர், ``தனது சிந்தனை அனைத்தும் தற்போது அண்டை நாட்டின்மீது உள்ளதால், இப்படி தவறுதலாகக் கூறிவிட்டேன்" என்றார்.