Published:Updated:

''எந்தப் பழியையும் என்மீது போட்டுவிடாதீர்கள்!

சோ சொல்கிறார்!

''எந்தப் பழியையும் என்மீது போட்டுவிடாதீர்கள்!

சோ சொல்கிறார்!

Published:Updated:
##~##

ட்டமன்றத் தேர்தல் முடிந்து எட்டு மாதங்கள்கூட முடிவடையாத நிலையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் போடும் விழாவாக அமைந்து விட்டது துக்ளக் ஆண்டு விழா! 

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். இது, 42-வது ஆண்டு விழா. முன்னாள் துணை பிரதமர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இந்த ஆண்டு வந்திருந்தது அரசியல் டென்ஷனை ஆரம்பித்து வைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோ மேடை ஏறியதும் அத்வானி, மோடி ஆகியோரும் வர, 'பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் எழுந்து அடங்கியது. முதல் நிகழ்ச்சியாக வாசகர்களின் கேள்வி களுக்குப் பதில் சொன்னார் சோ. முதலில், கல்பனா என்ற பெண் கேள்வி கேட்க அழைக்கப்பட்டார்.

''எந்தப் பழியையும் என்மீது போட்டுவிடாதீர்கள்!

''எத்தனையோ பேர் இருக்க.. முதலில் ஒரு பெண்ணைக் கேள்வி கேட்க அழைத்து இருக்கிறேன். பெண் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் நான்...'' என்றார் சோ. பெண் உரிமை விவகாரங்களில் அடிக்கடி தலை உருட்டப்படும் சோ, இப்படிச் சொன்னதும், அரங்கம் எங்கும் சிரிப்பலை. சோ பேச ஆரம்பித்த நேரத்தில் வந்து சேர்ந்த ரஜினியை, மோடியும் அத்வானியும் எழுந்து கட்டிப் பிடித்துக் கை குலுக்கினார்கள்.

மேடை ஏறிய கல்பனா, ''உங்கள் நெருங்கிய நண்பர் ஜெயலலிதாவால் இலவசங்களை ஒழிக்க முடியாதா?'' என்று கேட்டார்.

''கடந்த தேர்தலில் அ.தி.மு.க. இலவசத் திட்டங்களை அறிவிக்காமல் போனால், தி.மு.க. ஆட்சி தொடர்ந்திருக்கும். ஜெயலலிதாவின் நண்பர் என்பதற்காக எந்தப் பழியையும் என் மேல் போட்டு விடாதீர்கள். நான் வெறும் பார்வை யாளன் மட்டுமே. இலவசங்களுக்கு மக்களைப் பழக்கி விட்டார்கள். அதனால், ஜெயலலிதா இலவசத் திட்டங்களை அறிவித்தது சரியான காரியம்தான். அரசியல் உத்திக்காகச் செய்யப்பட்ட விஷயம் அது. அறிவிப்போடு நின்று விடாமல் அதை நிறைவேற்றவும் ஆரம்பித்திருக் கிறார்'' என்று பதில் சொன்னார் சோ.

''எந்தப் பழியையும் என்மீது போட்டுவிடாதீர்கள்!

அடுத்து கருணாநிதி பற்றி, ''படங்களில் எம்.ஜி.ஆரைப்பற்றி பேசும்போது நாகேஷ் பற்றியும் பேசுவோம். அதுபோல கருணாநிதியைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. சட்டசபைத் தேர்தலில் 'தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடக்கிறது’ என்றார். அப்புறம் 'தோல்விக்கு நானே காரணம்’. பிறகு, 'கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று மாற்றி மாற்றிப் பேசினார். 'பார்ப்பன சூழ்ச்சி’ என்றார். ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்த விஜயகாந்த் ஐயர், தா.பாண்டியன் சாஸ்திரிகள், ஜவாஹிருல்லா தீட்சிதர் ஆகியோரைத்தான் பார்ப்பன சூழ்ச்சி என்கிறாரா? 'ராஜீவைக் கொன்றவர்களை ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தால் மன்னித்திருப்பார்’ என்று சொன்ன கருணாநிதியின் பகுத்தறிவு இதுவரைக்கும் எனக்குப் புரியவில்லை. கட்சிக்குப் பிரச்னை என்றால், அதாவது அவருடைய குடும்பத்துக்குப் பிரச்னை என்றால், உடனே செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டிவிடுவார்'' என்று சொன்னதும் மீண்டும் சிரிப்பலை!

''எந்தப் பழியையும் என்மீது போட்டுவிடாதீர்கள்!

பொதுவாக ஜெயலலிதாவை ஆதரித்துக் கருத்துக் களைச் சொல்வார் சோ. ஆனால், இந்த முறையும் அவரைப் புகழ்ந்து அதிக நேரம் பேசினார்.  ''ஜெயலலிதாவைப் போல் தினமும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று உழைக்கக்கூடிய ஒரு முதல்வரைப் பார்த்தது இல்லை. தவறு என்று தெரிந்து விட்டால், அவரைப்போல தைரியமாக யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது. மோடி மாதிரி... குஜராத் மாதிரி இங்கே ஆட்சி நடைபெற வேண்டும் என்ற ஆசை அவர்  மனதில் இருக்கிறது. அதற்குத் தொடர்ந்து ஜெயலலிதா 10 ஆண்டுகளாவது ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்துக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். தேசபக்தி, கடின உழைப்பு, பல மொழிகள் பேசும்திறன் எனப் பன்முகத் திறன்கள் ஜெயலலிதாவிடம் இருக்கின்றன. மத்தியில் அடுத்து அமையப்போகும் புதிய ஆட்சியை உருவாக்கும் பணியில் அ.தி.மு.க-வுக்கு நிச்சயம் பங்கு இருக்கும். மத்தியில் பி.ஜே.பி. அல்லாத, அது ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வருவதாக இருந்தால்... ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும். அதற்கு பி.ஜே.பி. சப்போர்ட் செய்யும்'' என்றவர், சசிகலா விவகாரத்தை லேசாகத் தொட்டார்.

''ஒரு தவறு நடக்கிறது என்றால், அதன் மீது ஜெயலலிதா எவ்வளவு துணிச்சலாக நடவடிக்கை எடுக்கிறார் என்பதற்கு நல்ல உதாரணம் சசிகலா குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து நீக்கியது. இது நல்லதொரு ஆபரேஷன். இந்தத் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு'' என்றார்.

அடுத்துப் பேசிய அத்வானி, ''ஜெயலலிதா ஆட்சி நடக்கும்போது நானும் மோடியும் இங்கே வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் யூகங்களை எழுப்பி இருக்கிறது. பி.ஜே.பி-க்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே இயற்கையான கூட்டணி அமைந்துள்ளது என்பதை ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கவில்லை என்றாலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எங்களுக்கு அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அதனால் இது இயல்பான கூட்டணி. இப்படிச் சொல்வதால் அரசியல் தந்திரம் என்று நினைத்து விடாதீர்கள். ஜெயலலிதா, நரேந்திர மோடி ஆகியோரைப் போன்ற மாற்றம் ஏற்படுத்தக்கூடிய தலைவர்கள் நம் நாட்டுக்குத் தேவை. தமிழர்களால் கொண்

டாடப்படும் பொங்கல் திருநாள் மாற்றத்தின் அடையாளத்தை குறிப்பதாகும். அந்த வகையில், சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கும் நாள் இது. எனவே, இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் ஆண்டாக அமையும். மத்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைப் போல ஒரு ஊழல் நிறைந்த மோசமான ஆட்சியை நாடு இதுவரை பார்த்தது இல்லை. காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருந்து அகற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றுசேர வேண்டும். பி.ஜே.பி.யும் அ.தி.மு.க.வும் ஒருங்கிணைய வேண்டும்'' என்று பொடி வைத்துப் பேச, கூட்டம் ஆர்ப்பரித்தது.

அடுத்து மோடி மைக் பிடித்தார். ''மத்திய காங்கிரஸ் அரசு, காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. அந்த வகையில், தமிழகமும் குஜராத்தும் தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. இது இந்தியக் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது'' என்று, ஜெயலலிதாவின் கருத்துகளையே மோடியும் பிரதிபலித்தார்.

அத்வானியும் மோடியும் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், சந்திப்பு நடைபெறவில்லை. ஆனால், அவர்கள் கலந்துகொண்ட விழாவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. காமராஜர் அரங்கம், மியூசிக் அகாடமி என்று தனியார் அரங்கங்களில் இதுவரை நடந்து வந்த விழா இந்த முறை, வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது. அத்வானி, மோடி வருகைக்காக சாலைகள் சீர் செய்யப்பட்டன. போலீஸ் பாதுகாப்பும் ஏகத்துக்கும் இருந்தது. பார்வையாளர்கள் கொண்டுவந்த பொருட்களை எல்லாம் வாங்கி வைத்து டோக்கன் கொடுக்கும் வேலையை போலீஸே பெருமையுடன் செய்தது. வாகனங்களை நிறுத்துவதற்காக மாநகராட்சிப் பள்ளியையும் கொடுத்து உதவினார்கள்.  

ஆக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு  அ.தி.மு.க-வுக்கு ஒரு கூட்டணிக் கட்சி ரெடி!

- எம். பரக்கத் அலி

படங்கள்: கே.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism