Published:Updated:

`மோடி ஆட்சியில் இந்தியா, ஹிட்லரின் ஜெர்மனியைவிட மோசமாக இருக்கிறது!’ - காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாக்கு

`மோடி ஆட்சியில் இந்தியா, ஹிட்லரின் ஜெர்மனியைவிட மோசமாக இருக்கிறது!’ - காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாக்கு
`மோடி ஆட்சியில் இந்தியா, ஹிட்லரின் ஜெர்மனியைவிட மோசமாக இருக்கிறது!’ - காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாக்கு

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்த அமைப்பின் முகாம்கள் கண்காணிப்பட்டது. இதையடுத்து 12 நாள்கள் கழித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எல்லையில் போர் பதற்றம் நீடித்தது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்தது. இந்திய விமானப்படை நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படையின் எஃப் 16 ரக விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இந்தியாவின் மிக் 21 பைசான் ரக விமானம் ஒன்றும் இந்தத் தாக்குதலில் வீழ்ந்தது. அதில் இருந்த இந்திய விமானி பாகிஸ்தான் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். ஜெனிவா ஒப்பந்தத்தின்படி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், `மோடியின் இந்தியா ஹிட்லரின் ஜெர்மனியைவிட மோசமாக இருக்கிறது’ என ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர், சஃபூதின் சோஸ் (Saifuddin Soz) கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சியில் பேசிய அவர், ``பிரதமர் மோடி வெற்றி பெறுவதற்குத் தவறான வழிமுறையைப் பின்பற்றுகிறார். தேர்தல் நேரத்தில் இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும் அமைதியின்மையை உருவாக்க விரும்புகிறார். பாகிஸ்தானுக்கு எதிராக ஏதாவது செய்ய நினைக்கிறார். இந்தியர்கள் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஹிட்லரின் ஜெர்மனியைவிட மோடி நாட்டை வழிநடத்துகிறார்கள். பாசிசம் நம்மை விட்டு அகலவில்லை. நாம் இப்போது பாசிசத்தை நடைமுறையில் அனுபவித்து வருகிறோம்’’ என்று விமர்சித்திருக்கிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடி இந்தியா மீது பாசிசத்தை திணித்துள்ளார். நாம் ஆபத்தான நிலையில் வாழ்கிறோம். என்ன நடந்தது என்று பாருங்கள்” என அவர் ட்வீட் செய்திருந்தார்.