Published:Updated:

பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!

பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!

சென்னை: 'பா.ம.க.வை, தி.மு.க. கூட்டணியில் சேர்த்தால் நான் தி.மு.க.வை விட்டு ஒதுங்கி விடுவேன்' என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.

'திராவிடக் கட்சிகளோடும், தேசியக் கட்சிகளோடும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். ஆனால், மரக்காணம் கலவரமும் அதையொட்டி பா.ம.க.வினர் மீது அ.தி.மு.க. அரசு எடுத்து வரும் இரும்புத்தனமான நடவடிக்கைகளும் மருத்துவரின் மனத்தை மாற்றி யோசிக்க வைத்திருப்பதாக சொல்கிறார்கள். பா.ம.க. வன்னியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக தி.மு.க.வோடு கைகோர்க்கலாம் என பா.ம.க. வி.ஐ.பிக்கள் ராமதாஸுக்கு யோசனை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

பா.ம.க.வின் மனமாற்றத்தை தெரிந்து கொண்டு தி.மு.க.வும் மெதுவாக காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறது. ராமதாஸின் உடல் நிலை குறித்து தினமும் அன்புமணி ராம தாஸுடன் அக்கறையோடு விசாரித்து வருகிறார் ஸ்டாலின். இன்னொரு பக்கம், பா.ம.க. மேல்மட்ட தலைவர்களோடு முன்னாள அமைச்சர் துரைமுருகன் தொடர்பில் இருக்கிறார். தி.மு.க. தலைமையின் இந்த நடவடிக்கைகள் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்களை அதிருப்தியடைய வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. புள்ளிகள் சிலர், ''கூட்டணி மாற்றங்களை

##~~##
பற்றி கவலைப்படாமல் பொன்முடி மீது பா.ம.க. கடந்த காலங்களில் வரம்பு கடந்த விமர்சனங்களை அள்ளி வீசி இருக்கிறது. பா.ம.க.வால் மற்றவர்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார் பொன்முடி. அப்படி இருக்கும் போது, தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவதை அவரால் எப்படி ஜீரணித்துக் கொள்ளமுடியும்? அதனால் தான், ''பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்தால் தி.மு.க.வை விட்டு நான் ஒதுங்கிவிடுவேன்' என்று தனது கருத்தை தைரியமாக தலைமைக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் பொன்முடி" என்கிறார்கள்
இன்னொரு தரப்பிலோ, ''அவரது நிலையில் இருந்து பார்த்தால் பொன்முடி சொல்வது சரிதான். ஆனால், திருமாவளவனை கூட்டணியில் வைத்திருப்பதால் தலித் ஓட்டுக்கள் அப்படியே தி.மு.க.வுக்கு திரும்பும் என்ற நிலை இல்லை. தலித்கள் சூழ்நிலைக்கேற்ப வாக்களித்துவிட்டு போய்விடுவார்கள். ஆனால், வன்னியர்கள் அப்படி இல்லை. பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தால் வன்னியர் ஓட்டுக்களில் பெரும்பகுதியை ஈர்த்துவிட முடியும். இப்போதுள்ள நிலையில் அ.தி.மு.க. வன்னியர்கள் கூட பா.ம.க.வுக்கு வாக்களிக்கும் வெறியில் இருக்கிறார்கள். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் தலைவரும், தளபதியும் மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், தலைவர் குடும்பத்தோடு நெருக்கமாக உள்ள பொன்முடியின் எதிர்ப்பை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை" என்கிறார்கள்.
என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
-குளஸ்