Published:Updated:

``கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து பேசியது அநாகரிகமான செயல்” - துரைமுருகனை விமர்சித்த தம்பிதுரை

``கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து பேசியது அநாகரிகமான செயல்” - துரைமுருகனை விமர்சித்த தம்பிதுரை
``கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து பேசியது அநாகரிகமான செயல்” - துரைமுருகனை விமர்சித்த தம்பிதுரை

``கூட்டணி வைத்துதான் வெற்றி பெறும் என்ற நிலை அ.தி.மு.க-வுக்கு இல்லை. கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க தனித்து நின்றே பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனினும் தே.மு.தி.க, அ.தி.மு.க-வின் கூட்டணிக்குள் இணைய வேண்டும் என்பதே எங்களது ஆவல்" என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை புதுக்கோட்டையில் பேசினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை எம்.எல்.ஏ ஆக்கிய விராலிமலை சட்டமன்றத் தொகுதி கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த மாதம் விராலிமலை தொகுதியில் பொதுமக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தற்போது மக்களை மீண்டும் சந்தித்து மனுக்களைப் பெற்று வருகிறார். நேற்று விராலிமலை தொகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,  ``தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி பயனற்ற கூட்டணி. அந்தக் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும். 18 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட்டணி வைத்து மக்களுக்கு நல்லது ஏதும் செய்யாதவர்கள், இனியும் நல்லது ஏதும் செய்ய மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் ஒரு கட்சி பல கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இயல்பு. ஆனால், தே.மு.தி.க - தி.மு.க-வுடன்  நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து விமர்சித்து துரைமுருகன் பேசியிருப்பது அநாகரிகமான செயலாகும். கூட்டணி வைத்துதான் வெற்றி பெறும் நிலை என்பது அ.தி.மு.க-வுக்கு இல்லை. பல தேர்தல்களில் அ.தி.மு.க தனித்து நின்றே பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

தே.மு.தி.க வந்தால்தான் அ.தி.மு.க வெற்றிபெறும் என்பது இல்லை. இருப்பினும் தே.மு.தி.க எங்கள் கூட்டணிக்குள் வர வேண்டும் என்பதே எங்களது ஆவல். தே.மு.தி.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நான் பா.ஜ.க-வை விமர்சனம் செய்தேன். ஏன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் அ.தி.மு.க-வை விமர்சனம் செய்தனர். அதனால், தான் நானும் பதிலுக்கு அவர்களை விமர்சனம் செய்தேன். ஆனாலும், மத்திய பா.ஜ.க தலைவர்கள் யாரும் அ.தி.மு.க-வை விமர்சனம் செய்யவில்லை. ஆனாலும், நான் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க-வை குறை கூறவில்லை. ஜெயலலிதா  இருந்த போதிலிருந்தே பா.ஜ.க, அ.தி.மு.க நட்புடன்தான் இருக்கிறது" என்றார்.