Published:Updated:

காஷ்மீரில் வீடு புகுந்து கடத்தப்பட்ட ராணுவ வீரர் - விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம்!

காஷ்மீரில் வீடு புகுந்து கடத்தப்பட்ட ராணுவ வீரர் - விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம்!
காஷ்மீரில் வீடு புகுந்து கடத்தப்பட்ட ராணுவ வீரர் - விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம்!

கடந்த மாதத்திலிருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதல், பால்கோட் இந்திய விமானப்படை தாக்குதல், பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன், ஜம்மு பேருந்து நிலைய குண்டுவெடிப்பு போன்ற அனைத்து சம்பவங்களும், கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே நிகழ்ந்தது.

இதனால், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்திய எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. நேற்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில், முகமது யாசின் என்ற ராணுவ வீரரைத் தீவிரவாதிகள் வீடு புகுந்து கடத்தியதாகத் தகவல்கள் வெளியானது. இவர், இந்திய ராணுவப் படையில் ஜக்ளி என்ற பிரிவில் பணியாற்றிவருகிறார். விடுமுறையில் தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, அவர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், 'ராணுவ வீரர் யாசின் கடத்தப்படவில்லை'  என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தன் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘விடுமுறையில் புட்காம் சென்றிருந்த ராணுவ வீரர் கடத்தப்பட்டார் என்ற  செய்தி தவறானது. அவர் பாதுகாப்பாக உள்ளார். தயவுசெய்து அனுமானங்களைத் தவிர்க்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.