வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் அதிகரித்துவிட்டது எனத் தேர்தலுக்குமுன் செய்தி வெளியானவுடன் ஆளும்கட்சி அதனைக் கடுமையாக மறுத்தது. தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (NSSO - National Sample Survey Office) ஆய்வுசெய்து கண்டறிந்த புள்ளிவிவரங்களை வெளியிட மறைமுகமாகப் பல நெருக்குதல்களைத் தந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் தேர்தலில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம்தான் ஆளும்கட்சியின் இந்தச் செயலுக்குக் காரணம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால், தேர்தல் முடிவுகளில் அது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.

தேர்தல் முடிந்து, முன்பைவிட அதிக அளவில் தொகுதிகளை பா.ஜ.க பிடித்துள்ள நிலையில், தேசிய மாதிரி சர்வே அலுவலகம் வெளியிடவிருந்த புள்ளிவிவரங்களை இப்போது வெளியிட்டிருக் கிறது மத்திய அரசாங்கம்.

இந்த அறிக்கையின்படி, கடந்த 2017-18-ல் வேலைக்குத் தகுதியான நகர்ப்புற இளைஞர்களில் 7.8 சதவிகிதத்தினரும், கிராமப்புற இளைஞர்களில் 5.3 சதவிகிதத்தினரும் வேலை இழந்திருக்கிறார்கள். 1977-78 காலங்களில் வேலை யில்லாத் திண்டாட்டம் 2.5 சதவிகிதமாக இருந்தது. அது 2017-18 ஜூலை முதல் ஜூன் வரையிலான கணக்கெடுப்பில் 6.1% என்று கண்டறியப் பட்டுள்ளது. இது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகம்.

இந்த சர்வே 7,014 கிராமங்கள், 5,759 நகர வட்டாரங்களிள் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 1,02,113 குடும்பங்களைச் சேர்ந்த 4,33,339 பேரைச் சந்தித்து, பல கேள்விகளைக் கேட்டு, அவர்கள் சொன்ன பதில்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரம் வந்திருக்கிறது. இது புள்ளியியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் மிகச் சரியான அளவீடுகளின்படி உருவாக்கப்பட்டிருப்பதாக தேசிய மாதிரி சர்வே அலுவலகம் சொல்கிறது.

படித்தால் வேலை கிடைத்துவிடுமா?

இந்திய மாணவர்கள் அதிகம் படித்ததுதான் வேலை யின்மைக்கு முக்கியக் காரணம் என இந்த ரிப்போர்ட் சொல்வது அதிர்ச்சியான விஷயம்தான். படிக்காத இளைஞர்களில் 2.1 சதவிகிதத்தினரும் படித்த இளைஞர்களில் 9.2 சதவிகிதத்தினரும் வேலையின்றி இருக்கிறார்கள்.

சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (CMIE) என்னும் அரசு நிறுவனம் நடத்திய ஆய்வில், உயர்கல்வி பெற்றவர்களில் 13.2% பேர் வேலையின்றி இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இளங்கலைப் பட்டப்படிப்பு படித்த பெண்கள் 35% பேர் வேலையற்றவர்களாக இருக்கிறார்கள்.

கிராமமும் நகரமும்

2017-18-ம் வருடத்தில் வேலை கிடைத்தவர்களில் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் 52.2% மட்டுமே. அப்படியானால், வேலை கிடைக்காத மற்ற இளைஞர்கள் எல்லாம் ‘பக்கோடா’ போடப் போய்விட்டார்களா என்று கேட்கத் தோன்றுகிறது!

கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் வேலைகளில் பங்கெடுப்பது 8% குறைந்தி ருப்பதாக இந்த சர்வேயில் தெரிய வந்திருப்பது உள்ள படியே கவலைதரும் விஷயம் தான். பெண்களுக்கு சம உரிமை தரவேண்டும் என நாம் வாய் கிழியப் பேசுகிறோம். ஆனால், அவர்கள் இன்னும் அதிக அளவில் பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுக்கிற மாதிரி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தத் தவறிவிட்டோமே!

2004-05-லிருந்து 2011-12 வரை நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பின்மையானது (7.8%) கிராமங்களைவிட (5.3%) அதிகமாக இருந்தது. இதே காலகட்டத்தில், 15.2 சதவிகித மாக இருந்த கிராமப்புற படித்த பெண்களின் வேலையில்லாமை, 2017-18-ல் 17.3 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 2011-12-ல் கிராமப்புறங்களைச் சேர்ந்த படித்த வாலிபர்கள் வேலை யில்லாமல் இருந்த நிலை 4.4 சதவிகிதமாக இருந்தது, 2017-18-ல் 10.5 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதிவேக வண்டிகளில் கழுத்தில் தொங்கும் செயினைப் பறித்துக்கொண்டு செல்வதில் படித்த இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள் என காவல் துறை சொல்வது இதைத்தானா?

இந்தியா - இளமையான நாடு

இந்தியா உலகிலேயே மிகவும் இளமையான மக்கள்வளம் கொண்ட நாடு. 15-லிருந்து 59 வயது வரை இருக்கும் மக்கள்தொகை 65%. 2020-ல் இந்தியர்களின் சராசரி வயது 28-ஆக இருக்கும். இது சீனா மற்றும் அமெரிக்காவில் 45-ஆகவும், ஜப்பானில் 49-ஆகவும் இருக்கும். இவற்றை மிகப் பெரிய சொத்தாக அறிவித்து 10 வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால், இந்தச் சொத்தினை சரியாகப் பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம் என்பதே உண்மை.

இன்றைய நிலையில், வாரத்திற்கு ஒரு மணி நேரம்கூட வேலை கிடைக்காதவர்கள் 9.9% பேர். இவர்கள் ஏறக்குறைய எல்லா வயதிலும் இருக்கிறார்கள். இதிலும் 15-லிருந்து 29 வயது வரை உள்ள இளைஞர்கள் 23.7% பேர் என்பதைப் பார்க்கும்போது இளமைச் செல்வத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

பணமதிப்பு நீக்கம்தான் காரணமா?

கடந்த 2016-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு மற்றும் குறுந்தொழில்கள் முடங்கின. வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தை அடைய இதுதான் முக்கிய காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.

தேசிய மாதிரி சர்வே அலுவலகம் வெளியிட் டிருக்கும் அறிக்கையின்படி, மூன்று வகைத் தொழில்களைச் செய்பவர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். வேளாண்மை துறை (Agriculture Sector), இரண்டாம் நிலைத் தொழில் துறை (Secondary Sector), மூன்றாம் நிலைத் தொழில் (Tertiary Sector) ஆகியவைதான் அந்த மூன்று வகைத் தொழில்கள்.

இதில் வேளாண்மைத் துறையில் 5.5 சதவிகிதமும், இரண்டாம் நிலைத் தொழிலில் 34.3 சதவிகிதமும் மூன்றாம் நிலைத் தொழிலில் 60.2 சதவிகிதமும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள். இது மிகவும் அபாயகரமானது.

முதன்மைத் தொழில் பிரிவாக வேளாண்மை இருக்கும்பட்சத்தில் அதில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களின் சதவிகிதத்தைப் பார்க்கும்போது, இனிமேலும் இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்ல முடியாது என்பதையே பறைசாற்றுகிறது. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்து வதற்கும் வேலைவாய்ப்பினைப் பெருமளவில் உருவாக்குவதற்கும் இரண்டு கமிட்டிகளை அமைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்பது சமீபத்திய செய்தி.

பொதுவாக, ஒரு பிரச்னையை மக்கள் மனதிலிருந்து மறக்கவைக்க ஓர் எளிய வழி, கமிட்டி அமைப்பது என்பார்கள். இந்த கமிட்டி களும் அப்படி இருந்துவிடாமல், வேலைவாய்ப்பை உள்ளபடியே உருவாக்கும் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா ஆகிய திட்டங்கள் எல்லாம் அருமையான திட்டங்களே. ஆனால், வேலைவாய்ப்பினை மிகப் பெரிய அளவில் உருவாக்காவில்லை என்றால், இந்தத் திட்டங் களால் எந்தப் பயனும் இல்லை.

கடந்த ஆட்சியில் மோடி அரசாங்கம் செய்யாமல் விட்ட விஷயங்களை இந்த முறையாவது தவறாமல் செய்ய வேண்டும் என்பதுதான் நமது ஒரே கோரிக்கை!