`நீங்க போட்டியிட்டா 2. இல்லைனா 1’ - ஜி.கே.வாசனுக்கு எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனை! | Tamil maanila congress will alliance with Aiadmk in Loksabha election

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (09/03/2019)

கடைசி தொடர்பு:12:14 (16/03/2019)

`நீங்க போட்டியிட்டா 2. இல்லைனா 1’ - ஜி.கே.வாசனுக்கு எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனை!

அ.தி.மு.க கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளது. மேலும் ஜி.கே.வாசன் போட்டியிட்டால், மயிலாடுதுறை தொகுதியும் ஒதுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி வரும் செவ்வாய்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து ஏற்கெனவே, அதன் தலைவர் ஸ்டாலின் அறிவித்துவிட்டார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க, பா.ஜ.க சேர்ந்துவிட்டது. மேலும், கூட்டணிக்காக தே.மு.தி.க, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திவந்தது அ.தி.மு..க. இந்த நிலையில், தே.மு.தி.க நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்துப் பேசியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால், அ.தி.மு.க-வுடன் பேச்சு வார்த்தை நடத்திவந்த தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு, அ.தி.மு.க கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து த.மா.கா-வை சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``அ.தி.மு.க கூட்டணியில் நாங்கள் இணைவதற்கான பேச்சு வார்த்தை கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.எங்களுக்கு தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டுவருகிறோம். இதில் தஞ்சாவூர் ஒதுக்குவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர்.மயிலாடுதுறையில் ஜி.கே.வாசன் போட்டியிட வேண்டும் என அ.தி.மு.க, பா.ம.க ஆகியவை விரும்புகின்றன. ஆனால், இதுகுறித்து எங்கள் தலைவர் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. தஞ்சாவூரில் முன்னாள் எம்.எல்.ஏ என்.ஆர்.ரெங்கராஜனின் தம்பி என்.ஆர். நடராஜன் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்” என்றனர்.

அ.தி.மு.க தரப்பில் சிலரிடம் பேசினோம், ``எங்க கூட்டணியில் த.மா.கா வருவது உறுதியாகிவிட்டது. தஞ்சாவூர் தொகுதியை த.மா.கா கூட்டணிக்குத் தருவதற்கு அ.தி.மு.க தலைமை சம்மதம் தெரிவித்துவிட்டது. கூடுதலாக மயிலாடுதுறையும் கேட்கிறார்கள். ஆனால், அந்தத் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிட்டால், நிச்சயம் தருகிறோம் என எடப்பாடி சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜி.கே.வாசன்   நேரடி போட்டியிடுவதற்கு யோசனை செய்கிறார். நாங்கள் அவர்தான் போட்டியிட வேண்டும் என டிமாண்ட் செய்கிறோம். இதனால், இன்னும் கூட்டணி அறிவிக்கப்படாமல் தள்ளிப் போகிறது. ஒரு வேளை ஜி.கே.வாசன் போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், அவர்களுக்கு ஒரு  இடம் மட்டுமே தருவதாக பேசப்பட்டுள்ளது”  என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close