Published:Updated:

மக்கள் நீதி மய்யத்துக்கு `பேட்டரி டார்ச்' சின்னம் ஒதுக்கீடு..! - கட்சி ரியாக்‌ஷன் என்ன?

மக்கள் நீதி மய்யத்துக்கு `பேட்டரி டார்ச்' சின்னம் ஒதுக்கீடு..! - கட்சி ரியாக்‌ஷன் என்ன?
மக்கள் நீதி மய்யத்துக்கு `பேட்டரி டார்ச்' சின்னம் ஒதுக்கீடு..! - கட்சி ரியாக்‌ஷன் என்ன?

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்துக்கு `பேட்டரி டார்ச்' சின்னம் ஒதுக்கீடு..! - கட்சி ரியாக்‌ஷன் என்ன?

கிட்டத்தட்ட 60 ஆண்டு காலமாக தமிழ் திரையுலகில், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதை, திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், நடன அமைப்பாளர் எனப் பல நிலைகளில் இருந்த கமல் ஹாசன் கடந்த ஆண்டு முதல் அரசியலில் இறங்கினார்.

தொடர்ச்சியாக, தனது கட்சியின் பெயரை அறிவித்து பல ஊர்களுக்குச் சென்று களப்பணி, பரப்புரை, கிராம சபை கூட்டம் என நடத்தி வருகிறார். மேலும், இந்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக விருப்ப மனுக்களும் பெறபட்டு வருகிறது. அந்த மனுவில் சாதி, மதம் பற்றியான எந்தக் கேள்விகளும் கேட்கப்படவில்லை, விருப்ப மனுத்தாக்கல் செய்பவர்களிடமும் சாதி, மதம் ஆகியவற்றைக் குறிப்பிடுவது அவசியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.  

மக்கள் நீதி மய்யத்துக்கு `பேட்டரி டார்ச்' சின்னம் ஒதுக்கீடு..! - கட்சி ரியாக்‌ஷன் என்ன?

இந்நிலையில் இந்தியா முழுவதிலும் சென்ற வருடம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகளுக்கு இன்று சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். 

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்’ என் குறிப்பிட்டுள்ளார். 

மக்கள் நீதி மய்யத்துக்கு `பேட்டரி டார்ச்' சின்னம் ஒதுக்கீடு..! - கட்சி ரியாக்‌ஷன் என்ன?