Published:Updated:

‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம்! - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்

‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம்! - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம்! - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்

- ஸ்ரீகுமார்

‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம்! - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்

- ஸ்ரீகுமார்

Published:Updated:
‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம்! - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம்! - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்
‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம்! - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்

த்தரப் பிரதேச முதல்வரைப் பற்றிச் சமூக வலை தளங்களில் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது, அந்த மாநில போலீஸ். நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மாநில அரசின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளரை விடுதலைசெய்ய உத்தரவிட்டுள்ளது.

கான்பூரைச் சேர்ந்த ஹேமா ஸ்ரீவத்சவா என்கிற பெண்மணி, கடந்த வாரத்தில் ஒருநாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் முன்பாக நின்று, ஊடகத்துக்குப் பேட்டி கொடுத்தார். கடந்த ஒரு வருடமாக யோகியுடன் வீடியோகால்மூலம் பேசி வருவதாகக் கூறிய அந்தப் பெண், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்க வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். அந்த வீடியோவை ‘தி வயர்’ டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றும் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா தனது ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவிட் டிருந்தார். இந்த வீடியோ வெளியானதும் ‘யோகி ஆதித்யநாத் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பதிவிட்டார்’ என்று சொல்லி பிரசாந்த் கனோஜியாவை உத்தரப் பிரதேச காவல் துறை கைதுசெய்தது.

‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம்! - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்

ஜூன் 8-ம் தேதியன்று வீட்டிலிருந்த கனோஜியாவைச் சீருடை அணியாத காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரை எங்குவைத்து விசாரித்தனர் என்ற தகவல் எதையும் கனோஜியாவின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவில்லை. அதன்பின்பு, லக்னோ கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கனோஜியா, 11 நாள்கள் காவலில் லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையடுத்து, தன் கணவர் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, கனோஜியா வின் மனைவி ஜகீஷா அரோரா, உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோரைக்கொண்ட விடுமுறைக் கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. ‘எந்த அடிப்படையில் பிரசாந்த் கனோஜியா கைதுசெய்யப்பட்டார்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள குடிமக்களுக்கான சுதந்திரம் என்பதை எவ்விதத்திலும் மீறுவதை அனுமதிக்க முடியாது’ என்று கூறி கனோஜியாவை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர்.

உ.பி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விக்ரம்ஜித் பானர்ஜி, ‘‘பத்திரிகையாளர் தற்போது நீதிமன்றக் காவலில் இருப்பதால், இந்த மனுவை விசாரிக்க இயலாது’’ என்று வாதிட்டார். அதற்கு, ‘‘சட்டம் தெளிவாக இருக்கிறது. தனிநபரின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது. அரசமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் அடிப் படையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க இயலும்’’ என்று மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர் நீதிபதிகள்.

‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம்! - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்

‘‘அரசமைப்புச் சட்டம் தனி நபருக்கு அளித்துள்ள கருத்து தெரிவிக்கும் சுதந்திரமானது, புனிதமானது; மறுக்க முடியாதது. அந்தச் சுதந்திரத்தை எந்தவொரு அரசும் அபகரிக்க முடியாது. சமூக வலைதளங்களில் எழுப்பப் படும் தாக்குதல்களை உச்ச நீதிமன்றமும்கூட எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேசமயம், சட்டத்தின் அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது’’ என்று நீதிபதிகள் சொன்னபோது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், ‘‘மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் படத்தை மார்பிங் செய்து  வெளியிட்ட தற்காக, பி.ஜே.பி-யின் யுவ மோர்ச்சா தலைவர் பிரியங்கா சர்மா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் போது பிரியங்கா சர்மா மன்னிப்புக் கோர வேண்டும் என்று நீங்கள்தானே (நீதிபதி இந்திரா பானர்ஜி) குறிப்பிட்டீர்கள்...’’ என்று கூற, அதற்குப் பதில் அளித்த நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘‘அந்த வழக்கின் தன்மை வேறு, இது வேறு’’ என்றார்.

மேலும், ‘‘இந்த வழக்கின் அடிப்படையின்படி பார்த்தால், பத்திரிகையாளருக்கு 11 நாள்கள் நீதிமன்றக் காவல் அளித்ததே பெரும் குற்றமாகும். சமூக வலைதளத்தில் பத்திரிகையாளர் பதிவிட்ட கருத்தை உச்ச நீதிமன்றம் ஆமோதிக்கவில்லை. ஆனால், கருத்து தெரிவித்ததற்காக அவர் சிறை யில் அடைக்கப்பட்டிருப்பதுதான் எங்களுக்கு வருத்தமளிக்கிறது. மாநில அரசின் முறையற்ற நடவடிக்கை காரணமாகவே அவர் ஜாமீனில் விடுவிக்கப்படு கிறார். சட்டத்தின் அடிப்படையில் அவர் மீதான விசாரணை தொடரும்’’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நாற்பது நிமிடங்கள் நடைபெற்ற இந்த விசாரணை யின்போது மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் பேசவேண்டிய அனைத்தை யும் நீதிபதிகளே அரசு வழக்கறிஞரிடம் கேள்விகளாக எழுப்பினர்.

‘உத்தரவு’ பிரதேசம்... கதறும் கருத்துச் சுதந்திரம்! - குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்

கனோஜியாவின் விடுதலையும் அவருடைய வழக்கில் நீதிபதிகள் சொன்ன கருத்துகளும் தேசம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. கனோஜியாவை மட்டுமன்றி ஹேமா ஸ்ரீவத்சவா பேட்டியை ஒளிபரப்பிய நேஷன் லைவ் தொலைக்காட்சியின் ஆசிரியர் அனுஜ் சுக்லா, செய்தியாளர் இஷிகா சிங், செய்தியை வாசித்த அன்சுல் கௌஷிக்கையும் உத்தரப் பிரதேச போலீசார் கைதுசெய்து அதிர்ச்சி தந்தனர். கைதுசெய்ததுடன் நிற்காமல், சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் சேனல் செயல்படுவதாகக் கூறி சேனல் அலுவலகத்தையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாக, கோரக்பூரைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளது போலீஸ். தற்போது கைதுசெய்யப்பட்ட அனைவரும் பிணையில் வந்துவிட்டாலும் உத்தரப் பிரதேசத்தில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது கருத்துச் சுதந்திரம்!