Published:Updated:

`அமெரிக்காவிலிருந்து நேராகக் குதித்துவந்து சீட் கேட்கவில்லை’ - வாரிசு அரசியல் பற்றி ஓ.பி.எஸ் மகன்

`அமெரிக்காவிலிருந்து நேராகக் குதித்துவந்து சீட் கேட்கவில்லை’ - வாரிசு அரசியல் பற்றி ஓ.பி.எஸ் மகன்
`அமெரிக்காவிலிருந்து நேராகக் குதித்துவந்து சீட் கேட்கவில்லை’ - வாரிசு அரசியல் பற்றி ஓ.பி.எஸ் மகன்

இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி முதல் மே 19 -ம் தேதி வரை ஏழு கட்டகங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. 

`அமெரிக்காவிலிருந்து நேராகக் குதித்துவந்து சீட் கேட்கவில்லை’ - வாரிசு அரசியல் பற்றி ஓ.பி.எஸ் மகன்

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசியல் கட்சிகள் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. தி.மு.க-வில் நேர்காணல் முடிந்து, இன்று யாருக்கு எந்தத் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க-வை பொறுத்தவரை நேற்று முதல் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அ.தி.மு.க நேர்காணலில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்ப மனு அளித்த பலர் வந்து கலந்துகொண்டனர். 

`அமெரிக்காவிலிருந்து நேராகக் குதித்துவந்து சீட் கேட்கவில்லை’ - வாரிசு அரசியல் பற்றி ஓ.பி.எஸ் மகன்

இதில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும் கலந்துகொண்டார். அவர், முதலில் முதல்வருக்கு பூங்கொத்து அளித்து நேர்காணலில் கலந்துகொண்டார்.  பின்னர், அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ என் அப்பா குடும்ப அரசியலுக்கு எதிராக உள்ளார். தற்போது நான் அரசியலுக்கு வந்தால் எனக்கும் குடும்ப அரசியல் என்ற முத்திரை வந்துவிடுமா என என்னிடம் கேட்கிறார்கள். நான் அமெரிக்காவில் படித்துவிட்டு நேராக மீனம்பாக்கம் விமானநிலையத்தில் வந்து இறங்கி, தலைமைக் கழகத்தில் ’என் அப்பா பதவியில் இருக்கிறார் எனக்கு சீட் வேண்டும்’ எனக் கேட்கவில்லை. 

`அமெரிக்காவிலிருந்து நேராகக் குதித்துவந்து சீட் கேட்கவில்லை’ - வாரிசு அரசியல் பற்றி ஓ.பி.எஸ் மகன்

என் 18 வயது முதல் இந்தக் கட்சியைத் தெரியும். இதன் அனைத்து நிலைகளையும் நான் பார்த்துவருகிறேன். தற்போது எனக்கு வயது 39. சுமார் 21 ஆண்டுகளாக ஒவ்வொரு கிராமத்துக்கும்,  நகரங்களுக்கும்  சென்றுள்ளேன்.  தேனி மாவட்டத்தில் உள்ளேன். அங்கு நான் போகாத வீடுகளே கிடையாது. அந்த அளவுக்கு கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக வேலைசெய்து முன்னேறியுள்ளேன். என்னுடைய வயதில் நான் இவ்வளவு வேலைகள் செய்துள்ளேன் என்ற உரிமையில் இங்கு வந்துள்ளேன். பொதுவாக, மக்கள்சேவை செய்ய வேண்டும் . நான் வளர்ந்த பகுதி இன்னும் முன்னேற வேண்டும் என்பதற்காக சீட் கேட்கிறேன். எனக்கு சீட்  கொடுத்தால், மக்கள் பணியாற்ற மிகவும் ஆர்வமாக உள்ளேன். 

`அமெரிக்காவிலிருந்து நேராகக் குதித்துவந்து சீட் கேட்கவில்லை’ - வாரிசு அரசியல் பற்றி ஓ.பி.எஸ் மகன்

'திறமையாகவும் உண்மையாகவும், கட்சிக்கு விசுவாசமாகவும் இருந்தால் நிச்சயம் சீட் கிடைக்கும்' என ஒருங்கிணைப்பாளர் ஏற்கெனவே கூறியுள்ளார். நம்பிக்கைதான் வாழ்க்கை. எனக்கும் அந்த நம்பிக்கை உள்ளது. தமிழகம் முழுவதும் எப்படி ஜெயலலிதா 37 இடங்களில் வெற்றிபெற்றாரோ, அதை விட தற்போது உள்ள கூட்டணி 40-க்கு 40 இடங்களில் வெற்றிபெறும் அளவுக்கு வெற்றிக் கூட்டணியாக உள்ளது. நான் தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர். அங்கு மட்டும்தான் போட்டியிடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.