மத்திய அரசாக இருந்தாலும்... மாநில அரசாக இருந்தாலும் எந்தக் கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் ‘மக்கள் விரோதப்போக்கு’ என்ற ஒரே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். ‘அரசியல் விழிப்பு உணர்வு அதிகம் பெற்றவர்கள்’ என்று கூறப்படும் கேரள மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல. காலங்காலமாக வாழ்ந்த நிலத்தைவிட்டு வெளியேற்றப்படுவதால், வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள்.

மலைகள் சூழ்ந்த மாவட்டம், வயநாடு. அதில் ஒன்று துவரிமலை. அந்தப் பகுதியில் இருந்த பழங்குடி மக்களை, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, வனப் பகுதியை ஆக்கிரமித்ததாகச் சொல்லி வலுக் கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது, கேரள அரசு. ‘பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக எங்களை வெளியேற்றுகிறார்கள். எங்களுக்குத் தலா இரண்டு ஏக்கர் நிலத்துக்கான பட்டா வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இரண்டு மாதங்களாக வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அந்த மக்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ (எம்.எல்) வயநாடு மாவட்ட நிர்வாகி பிரகாஷ், “கேரள அரசு கடந்த 1970-ம் ஆண்டு, 15 ஏக்கர் பரப்புக்கு மேல் தனிநபர்களிடம் இருக்கும் அரசு நிலத்தை அரசே எடுத்துக்கொள்ளும் வகையில் ஒரு நிலச் சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால், அந்தச் சட்டத்தில் தேயிலை எஸ்டேட், காபி எஸ்டேட், ரப்பர் எஸ்டேட் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ‘எஸ்டேட் வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள், அரசு நிலத்தை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதைச் சரியாகப் பராமரித்தால் போதும்’ என அந்தச் சட்டம் சொல்கிறது.

இந்தச் சட்டம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்ததால், பிரிட்டிஷ் நிறுவனமான ‘ஹேரிசன்ஸ் மலையாளம்’, ‘ட்ரவாங்கோ ரப்பர்ஸ்’, ‘டாடா’ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் பழங்குடி மக்கள் வாழ்ந்துவந்த நிலத்தைக் கைப்பற்றிக்கொண்டன. இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சொந்தமாக, கேரளா முழுவதும் 5,25,000 ஏக்கர் பரப்பில் நிலங்கள் இருக்கின்றன. ஹேரிசன்ஸ் நிறுவனம் மட்டும், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பு நிலத்தை வைத்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, அப்போதைய வருவாய்த் துறை அமைச்சர் அடூர் பிரகாஷ், ஹேரிசன்ஸ் நிறுவனத்தின் வசம் இருந்த அரசு நிலத்துக்கு நிலவரி கட்ட அனுமதி கொடுத்தார். அதை, கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். அதனால், அந்த நிறுவனத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அதே நிறுவனத்துக்கு நிலவரி கட்ட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுமே கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றன’’ என்றார்.

பழங்குடி மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் நிஜாமுதீன், “வயநாட்டு மண்ணின் மைந்தர்கள் 50 ஆண்டுகளாகப் போராடியும் தங்களின் நிலத்துக்கான உரிமையைப் பெற முடியவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளுமே வலதுசாரிக் கொள்கைகளைத்தான் பின்பற்று கின்றன. ‘வனத்துறைக்குச் சொந்த மான நிலத்தை ஆக்கிரமித்த தால்தான், பழங்குடி மக்களை வெளியேற்றினோம்’ என்று அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், அம்மக்கள் வாழ்ந்த இடத்தில், ஹேரிசன்ஸ் நிறுவனத்தின் பங்களா ஒன்று உள்ளது. வனப் பகுதியில் தனியார் பங்களா எப்படி இருக்க முடியும்?” என்றார்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒண்டன், “துவரிமலையிலிருந்து ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. எங்கள் மக்கள் சிலருக்கு, தலா ஒரு ஏக்கர் நிலத்துக்குப் பட்டா தந்துள்ளதாக, வயநாடு மாவட்ட நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அப்படிப் பட்டா வழங்கப் பட்டோர் பட்டியலில் என் பெயரும் உள்ளது. அவர்கள் குறிப்பிட்டுள்ள இடத்தை நான் பார்த்ததுகூடக் கிடையாது” என்றார்.

வயநாடு சப் கலெக்டர் உமேஷ் கேசவனிடம் பேசியபோது, “வயநாட்டில் 3,000 பழங்குடி மக்கள் நிலம் இல்லாமல் இருக்கின்றனர். முதற்கட்டமாக, அவர்களுக்கு நிலம் வழங்குவதற்காக 150 ஹெக்டேர் நிலத்தைக் கண்டறிந்துள்ளோம். சர்வே செய்தவுடன் அவர்களுக்குப் பட்டா வழங்கப்படும். வீடு கட்டு வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்” என்றார்.

- இரா.குருபிரசாத்

படங்கள்: கே.அருண்