Published:Updated:

நேர்மைக்குப் பரிசு... காத்திருப்போர் பட்டியல்! - இது சேலத்து கொடுமை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நேர்மைக்குப் பரிசு... காத்திருப்போர் பட்டியல்! - இது சேலத்து கொடுமை
நேர்மைக்குப் பரிசு... காத்திருப்போர் பட்டியல்! - இது சேலத்து கொடுமை

நேர்மைக்குப் பரிசு... காத்திருப்போர் பட்டியல்! - இது சேலத்து கொடுமை

பிரீமியம் ஸ்டோரி

முதல்வரின் மாவட்டமான சேலத்தில், முதன்மைக் கல்வி அதிகாரியாக 11 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார் கணேஷ்மூர்த்தி. அன்றுமுதல் அலுவலகத்தின் நுழைவாயிலில், ‘லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் குற்றம். யாராவது லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் கொடுங்கள்’ என்று அத்துறையின் தொடர்பு எண்களுடன் கூடிய பேனரை மாட்டிவைத்தார். மேலும், தனது சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கல்வித்துறை வட்டாரத்தில் நல்ல பெயரையும் பெற்றிருந்தார். இவரைத்தான் தற்போது எவ்வித காரணமும் சொல்லாமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது தமிழக அரசு.

நேர்மைக்குப் பரிசு... காத்திருப்போர் பட்டியல்! - இது சேலத்து கொடுமை

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஊழியர்களிடம் பேசினோம். “எங்களோட இத்தனை வருட சர்வீஸில் இப்படியொரு நேர்மையான அதிகாரியைப் பார்த்ததில்லை. தன்னைப் பார்க்க பணி நிமித்தமாக வரும் பார்வையாளர்கள் எவ்வளவு பெரிய வி.ஐ.பி-யாக இருந்தாலும் வரிசைப்படியே பார்க்க அனுமதிப்பார். லஞ்சம் வாங்கமாட்டார். எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் சட்டப்படியே நடந்துகொள்வார். சட்டத்துக்குப் புறம்பான காரியமாக இருந்தால், முகத்துக்கு நேராகவே ‘இது என்னால் முடியாது’ என்று சொல்லிவிடுவார். பள்ளிகளுக்கு விசிட் சென்றால், அங்கு தண்ணீர்கூட வாங்கிக் குடிக்கமாட்டார். வீட்டிலிருந்து டிபன் பாக்ஸில் கொண்டு வந்திருக்கும் உணவை ஜீப்பில் அமர்ந்தே சாப்பிடுவார். இப்படிப்பட்ட ஒரு நல்லவரைத்தான் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள்” என்றவர்கள் இதற்கான பின்னணித் தகவல்களையும் சொன்னார்கள்.

“சேலத்தின் நிழல் முதல்வர் என்று கூறப்படுபவரும் அந்த மாவட்ட புறநகர் அம்மா பேரவைச் செயலாளருமான இளங்கோவன்தான் இதற்குக் காரணம். இளங்கோவன் தரப்பினர் அவருக்கு வேண்டப்பட்ட ஒருவருடைய பள்ளிக்கு அங்கீகாரம் கொடுக்கச்சொல்லி சிபாரிசு செய்திருந்தனர். ஆனால், அந்தப் பள்ளியில் அரசு விதிமுறைகள்படி கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், கணேஷ்மூர்த்தி அதை நிராகரித்தார். அதேபோல நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்த அன்று மாலையே, அனைத்துப் பள்ளிகளுக்கும் இலவச ‘லேப்டாப்’களை விநியோகிக்கும்படி இவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம்காட்டி அதற்கு கணேஷ்மூர்த்தி மறுத்துவிட்டார். இவை தவிர, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த பல்வேறு தகுதியற்ற பரிந்துரைகளை நிராகரித்துவந்தார். இதனால், கடும்கோபத்தில் இருந்த இளங்கோவன் தரப்பு, மேலிடத்தில் அழுத்தம்கொடுத்து இவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது” என்றார்கள்.

நேர்மைக்குப் பரிசு... காத்திருப்போர் பட்டியல்! - இது சேலத்து கொடுமை

இதுகுறித்து இளங்கோவனிடம் பேசினோம். “சி.இ.ஓ மாற்றப் பட்டதை நானும் கேள்விப்பட்டேன். மிகவும் நல்ல மனிதர் அவர். அவரை ஏன் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் என்னை ஏன் இழுத்துவிடுகிறார்கள் என்று புரியவில்லை. நான் அவரிடம் எந்தப் பரிந்துரையும் அனுப்பவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு லேப்டாப் விநியோகம் செய்யச் சொல்லவில்லை” என்றார்.

அதிகாரிகளை அரசியல்வாதிகள் மாற்றலாம்... ஒருநாள் ‘அதிகாரத்தை’யே மக்கள் மாற்றுவார்கள்!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு