`தேர்தலில் வெற்றி பெற்று அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும்!’ - தம்பிதுரை நடத்திய சிறப்பு யாகம் | thambidurai Deputy Speaker of Lok Sabha Visits kumbakonam temple

வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:20 (16/03/2019)

`தேர்தலில் வெற்றி பெற்று அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும்!’ - தம்பிதுரை நடத்திய சிறப்பு யாகம்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் உள்ள சரபேஸ்வரர் சந்நிதியில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும். துணை சபாநாயகர் பதவியிலிருந்து  அடுத்த நிலைக்கு பதவி உயர வேண்டும் எனச் சிறப்பு யாகம் நடத்தி வழிப்பட்டார்.

தம்பிதுரை

மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, கடந்த ஜனவரி மாதம் குடும்பத்தினருடன் கும்பகோணம் வந்தார். அங்கு தங்கியவாறே திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புறத்தில் உள்ள ராகு,கேது தலமான சேஷபுரீஸ்வரர் கோவில், கும்பகோணம் பகுதிகளில் உள்ள திருவிடைமருதுார் மகாலிங்கசாமி கோயில், கஞ்சனுார் அக்னீஸ்ரர் கோவில் உள்ளிட்ட பல கோயில்களில் யாகங்கள் வளர்த்து சிறப்பு  பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அ.தி.மு.க-வின் முக்கிய பிரமுகர்களுக்குக்கூட சொல்லாமல் ரகசியமாகத் தம்பிதுரை வழிபாடு நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று குடும்பத்தினர் இல்லாமல் தனியாகக் கும்பகோணம் வந்த தம்பிதுரை, காலை எட்டு மணிக்கு மேல் தனது ஆதரவாளர்களுடன் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு வந்தார். 

கோயில்

கோயிலில் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார் சரபேஸ்வரர். சிறப்பு மிக்க சரபேஸ்வரரை வணங்கினால் மனக்கஷ்டங்கள், மறைமுகமாக இருக்கும் எதிரிகளின் தொல்லை, ஜாதக தோஷங்கள், கிரக தோஷங்கள், மனம் விரும்பும்படியான வாழ்க்கை, அரசியலில்  உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதிகம். இத்தகைய சிறப்பு மிக்க சரபேஸ்வரர் சந்நிதியில்  தம்பிதுரை 11 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேங்களை செய்து யாகம் நடத்தினார். பின்னர் கோயில் உள் வளாகம் மற்றும் வெளி பிராகாரம், கொடிமரம் உள்ளிட்ட இடங்களில் 303 சிதற்தேங்காய்  உடைத்து வழிபட்டார். 

சாமி தரிசனம்

மதியம் வரை இருந்து முழுமையாகத் தரிசனத்தை முடித்த பிறகே கோயிலில் இருந்து கிளம்பி சென்றார். அ.தி.மு.க, பா.ஜ.க.கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும். துணை சபாநாயகர் பதவியிலிருந்து அடுத்த நிலைக்கு பதவி உயர வேண்டும் எனத் தம்பிதுரை அவரது  ராசிக்கு யாகம் வளர்த்து அபிஷேகம் செய்ததாகக் கோயில் வட்டாரத்தில் பேசிக்கொண்டனர். இதே போல் ஒரு முறை தேர்தல் சமயத்தில் மறைந்த முதல்வர் ஜெயலிலதா மற்றும் சசிகலா இருவரும் ஒன்றாக வந்து எதிரிகளை வீழத்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தரிசனம் செய்துவிட்டுச் சென்றது குறிப்பிடதக்கது என்றும் கூறினர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close