Published:Updated:

`மாவோயிஸ்ட் தாக்குதல் உளவுத்துறை எச்சரிக்கை’- ராணுவ வீரரின் வீட்டுக்குச்செல்ல ராகுலுக்குத் தடை

`மாவோயிஸ்ட் தாக்குதல் உளவுத்துறை எச்சரிக்கை’-  ராணுவ வீரரின் வீட்டுக்குச்செல்ல ராகுலுக்குத் தடை
`மாவோயிஸ்ட் தாக்குதல் உளவுத்துறை எச்சரிக்கை’- ராணுவ வீரரின் வீட்டுக்குச்செல்ல ராகுலுக்குத் தடை

புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர் வசந்தகுமார் வீட்டுக்குச் செல்ல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

`மாவோயிஸ்ட் தாக்குதல் உளவுத்துறை எச்சரிக்கை’-  ராணுவ வீரரின் வீட்டுக்குச்செல்ல ராகுலுக்குத் தடை

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென்னிந்தியாவில் பிரசார பயணம் செய்கிறார். நாளை தமிழகம் வந்து தேர்தல் பிரசாரம் செய்யும் ராகுல் காந்தி நாளை மறுதினம் (மார்ச் 14) கேரள மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொள்கிறார். கேரள மாநிலம் பெரியா பகுதியில் அரசியல் காரணங்களால் கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறவும். புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்த வயநாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் வசந்தகுமார் வீட்டுக்குச் செல்வது போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.

`மாவோயிஸ்ட் தாக்குதல் உளவுத்துறை எச்சரிக்கை’-  ராணுவ வீரரின் வீட்டுக்குச்செல்ல ராகுலுக்குத் தடை

இந்த நிலையில், வயநாடு வைத்திரி பகுதியில் உள்ள தனியார் ரிசாட்டில் புகுந்த மாவோயிஸ்ட்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் கடந்த 6-ம் தேதி தாக்குதல் நடந்தது. அதில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார். சிலர் காட்டுக்குள் தப்பிச்சென்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு ராகுல் காந்தி வயநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராணுவ வீரர் வசந்தகுமார்  வீட்டுக்கு ராகுல்காந்தி செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.