Published:Updated:

`சந்திப்பு நன்றாகவே முடிந்தது; தொகுதிப் பங்கீடு குறித்து பேசல!'- விஜயகாந்த் இல்லத்தில் ராமதாஸ்

`சந்திப்பு நன்றாகவே முடிந்தது; தொகுதிப் பங்கீடு குறித்து பேசல!'- விஜயகாந்த் இல்லத்தில் ராமதாஸ்
`சந்திப்பு நன்றாகவே முடிந்தது; தொகுதிப் பங்கீடு குறித்து பேசல!'- விஜயகாந்த் இல்லத்தில் ராமதாஸ்

ஏப்ரல் மாதம் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் எனப் படு பிஸியாக உள்ளனர் நம் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள்.

`சந்திப்பு நன்றாகவே முடிந்தது; தொகுதிப் பங்கீடு குறித்து பேசல!'- விஜயகாந்த் இல்லத்தில் ராமதாஸ்

தமிழகத்தில், தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. தி.மு.க-வைப் பொறுத்தவரை வேட்பாளர்கள் நேர்காணல் முடிந்துவிட்டது. நேற்று தமிழகம் வந்த ராகுல் காந்தியுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 

அதுவே அ.தி.மு.க-வை பொறுத்தவரை  அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க, த.மா.கா ஆகிய அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் இணைந்துள்ளன. இந்தக் கூட்டணியிலும் வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவடைந்துவிட்டது. ஆனால் தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பா.ம.க-வும், தே.மு.தி.க-வும் ஒரே தொகுதிகளை குறிவைப்பதால் அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

`சந்திப்பு நன்றாகவே முடிந்தது; தொகுதிப் பங்கீடு குறித்து பேசல!'- விஜயகாந்த் இல்லத்தில் ராமதாஸ்

இந்த நிலையில், இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். இவர்களுடன் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோரும் விஜயகாந்த்தைச் சந்தித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

`சந்திப்பு நன்றாகவே முடிந்தது; தொகுதிப் பங்கீடு குறித்து பேசல!'- விஜயகாந்த் இல்லத்தில் ராமதாஸ்

இந்த சந்திப்புக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பாக சுமுக தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக தே.மு.தி.க, பா.ம.க இடையே கடுமையான அரசியல் மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில், தற்போது கூட்டணி அமைத்துள்ள இந்த கட்சிகளின் சந்திப்பு தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், ``தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே இங்கு வந்தோம். எங்களின் சந்திப்பு நல்லபடியாகவே முடிந்தது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. பொதுவாக அனைத்து தேர்தலின்போதும் தொகுதிகள் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்படும். தற்போதும் அந்த தாமதம் தான் எங்கள் கூட்டணியிலும் நிலவுகிறது. தே.மு.தி.க போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் பிரசாரம் செய்வோம்’ எனத் தெரிவித்தார்.